For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவில் ஈடுபடும் போது பாலுணர்ச்சி பொங்கி எழ உதவும் உணவுகள்!

உடலுறவின் போது பாலுணர்ச்சி பொங்கி எழுவதற்கு ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை தம்பதிகள் உட்கொண்டு வந்தால், உறவில் ஈடுபடும் போது பேரின்பத்தைக் காணலாம்.

|

தற்போதைய தலைமுறையினர் பலர் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணங்களாகும். இதனால் பாலுணர்ச்சி சரியாக தூண்டப்படாமல், உடலுறுவில் நாட்டமின்றி போகிறது.

Foods For A Raging Libido

இப்படி தம்பதியருக்குள் உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருந்தால், அதுவே இருவருக்குள்ளும் பிரச்சனையை அதிகரித்துவிடும். எனவே பாலுணர்ச்சி பொங்கி எழ, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும். இதற்கு தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் தான் காரணம். இந்த அமினோ அமிலம் அந்தரங்க உறுப்பில் உள்ள இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் உள்ள வைட்டமின் பி என்னும் ஃபோலேட், ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரிக்கும். ஹிஸ்டமைன் என்பது ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்ட முக்கியமானவை.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது பாலுணர்ச்சியைத் தூண்ட மிகவும் அவசியமான சத்து. மற்றும் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆற்றலை வழங்கும்.

மிளகாய்

மிளகாய்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் கெமிக்கல், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும் எண்டோபின் என்னும் ஹார்மோன்களை வெளியிட்டு, உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவும். எனவே அன்றாட சமையலில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் மக்னீசியம், மாங்கனீசு, ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இவை அனைத்தும் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கத் தேவையான சத்துக்கள். எனவே அத்திப்பழத்தை தம்பதிகள் சாப்பிட்டு வர, அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. அதோடு இதில் புரோமிலைன் என்னும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள் உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலுறவில் நன்கு செயல்பட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods For A Raging Libido

Here are some delicious items you can work into your diet that will increase your libido.
Story first published: Friday, October 14, 2016, 16:02 [IST]
Desktop Bottom Promotion