தசராவிற்குள் அழகிய வளைந்த இடையை பெற உதவும் 15 உணவுகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

தசராவை பற்றி நினைத்தவுடன் உங்கள் மனதில் முதலில் எழும் எண்ணமானது அனைத்து அடர்த்தியான நிறங்களுடனான அழகிய சேலைகளை கட்டியுள்ள பெண்கள். இந்த அழகிய அம்சமான சேலைகளை அணிந்துக், சரியான உடலமைப்புடன் காட்சியளிக்க, பெண்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

தசரா வந்து விட்டது. அதனால் அனைத்து பெண்களும் எப்படி அழகிய வளைந்த இடையை பெறும் பல வழிகளை பற்றி யோசிக்க தொடங்கியிருப்பார்கள். அவற்றில் ஒன்று தான் சுலபமாக கிடைக்கக்கூடிய சில டயட் உணவுகள். இவைகளை நீங்கள் உண்ணும் போது இரண்டு வார காலத்திற்குள் உங்களால் நல்ல பலனை காண முடியும்.

கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரோட்ஸ் அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதை கட்டுப்படுத்துவதை கண்டிப்பாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உணவுகள் போக, அன்றாட வேலைகளுடன் சேர்த்து சீரான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

உங்களுக்கு பல பரிந்துரைகள் வந்திருக்கும், நீங்களும் இணையதளத்தில் பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். இவையனைத்தும் உங்களை குழப்பியிருக்கும். தேவையில்லாமல் குழம்பாதீர்கள். நாங்கள் கூற போகும் சில டயட் உணவே உங்களுக்கு பெரிதும் உதவும்.

தசராவிற்குள் அழகிய வளைந்த இடையை பெற உதவும் 15 உணவுகளின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து படிக்கவும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழம்

நார்ச்சத்து அதிகமாகவும் கார்போஹைட்ரோட்ஸ் குறைவாகவும் உள்ள சிறந்த உணவுகளில் ஒன்றான வெண்ணெய் பழத்தை நீங்கள் உங்கள் கொழுப்பை குறைக்கும் செயல்முறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேரட்

கேரட்

கலோரிகள் குறைவாக உள்ள கேரட்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கொழுப்பை குறைக்க உதவும் அதே நேரத்தில், ஆற்றல் திறனையும் அளிக்கும். சிறந்த பலனை பெற கேரட்டை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

தயிர்

தயிர்

இடை பகுதியில் உள்ள அளவுக்கு அதிகமான கொழுப்பை நீங்கள் குறைக்க வேண்டும் என்றாலும், உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தை குறைந்த அளவிலான கொழுப்பை கொண்ட, எந்த ஒரு சுவையும் சேர்க்கப்படாதா தயிரை பயன்படுத்தவும்.

பீன்ஸ்

பீன்ஸ்

நார்ச்சத்து வளமையாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ள பீன்ஸ் கண்டிப்பாக உங்கள் டயட் செயல்முறையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய உணவாகும். இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்து, உங்களை ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

நார்ச்சத்து வளமையாக உள்ள ஓட்ஸ் கஞ்சி, கொழுப்பை எரிக்கும் செயல்முறையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான உணவாகும். இதில் வைட்டமின்கள், கனிமங்கள் வளமையாக உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது.

இஞ்சி

இஞ்சி

ஆன்டிஆக்சிடண்ட்கள் வளமையாக உள்ள இஞ்சி உங்கள் மெட்ட பாலிச செயல்முறையை துரிதப்படுத்த உதவும். இது கொலஸ்ட்ரால் அளவு மற்றும் கொழுப்பை குறைக்க உதவும். அதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேநீரில் கலந்து குடிக்கலாம்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால் அவை உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைக்க உதவுவதோடு கலோரிகளையும் எரிக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கவும், அதே நேரத்தில் உங்களை நீர்ச்சத்துடன் தக்க வைத்துக் கொள்ளவும் தண்ணீர் முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால் தான் நம் பெற்றோர்களும் நம் வீட்டு பெரியவர்களும் நம்மை அதிகமாக தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் வளமையாக உள்ளது. உங்கள் அன்றாட உணவில் ஒரு ஆப்பிள் பழத்தை சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்பும் குறைய உதவும்.

நட்ஸ்

நட்ஸ்

மிதமான அளவில் நட்ஸ்களை உட்கொண்டால், அளவுக்கு அதிகமாக உள்ள கொழுப்பு கரையும். நட்ஸில் கால்சியம், கனிமங்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அதனால் கூடுதல் கொழுப்பை, குறிப்பாக வயிறு மற்றும் இடை பகுகுதியில் குறைக்க விரும்புபவர்கள், நட்ஸ் உட்கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

எண்ணெய் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம். அதனால் கொழுப்பை கரைக்க வேண்டும் என விடா முயற்சியுடன் நீங்கள் இருந்தால், உங்கள் உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய்யில் ஓலிக் அமிலம் என்ற கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவும்.

சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்தல்

சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்தல்

சர்க்கரையில் ஃப்ரூக்ட்டோஸ் உள்ளது. இது உடலில், குறிப்பாக இடை மற்றும் வயிற்று பகுதியில் கொழுப்பை தேங்க விடும். அதனால் சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளவும்.

பச்சை பூக்கோசு

பச்சை பூக்கோசு

நார்ச்சத்து வளமையாக உள்ள உணவுகள் கொழுப்பை அதிகமாக எரிக்க உதவும். அப்படி நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் வளமையாக உள்ள சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது பச்சை பூக்கோசு. இது கலோரிகளை எரிக்க உதவுவதோடு கொழுப்பையும் குறைக்கும்.

மெல்லிய இறைச்சி

மெல்லிய இறைச்சி

அசைவ உணவு உண்ணுபவர்கள் மெல்லிய இறைச்சியை சேர்த்துக் கொண்டால் அது உதவிடும். இதில் கொழுப்பு குறைவாக இருந்தாலும் உடலுக்கு தேவையான புரதம் அதிகமாக உள்ளது.

தானியங்கள்

தானியங்கள்

நார்ச்சத்து வழமையாக உள்ள தானியங்கள் இடையை சுற்றி தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Diet Foods To Get Those Perfectly Curved Hips & Waist By Dussehra

Dussehra is just round the corner. So all you women struggling and thinking of ways to get those curvy hips and waist, read here to learn more about it.
Story first published: Sunday, October 2, 2016, 14:00 [IST]
Subscribe Newsletter