For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!

உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் முதலிலே ஆரோக்கியமான உணவுகளை வைப்பது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிக்கான உங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்

|

நீங்கள் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதை விரும்புபவரா? அப்படியானால் நீங்கள் இதை நிறுத்தி படிக்க வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கான தேடலில், உங்களுக்கு திடீர் பசியை அடக்குவது மிகப்பெரிய தடையாகத் தோன்றலாம். ஆனால் இந்த சூழலில் நிபுணர்கள் என்ன பரிந்துரைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, இப்போது வல்லுநர்கள் சிறிய உணவை சாப்பிடுவதன் மூலமும் உணவுக்கு இடையில் சரியான இடைவெளியை வைத்திருப்பதன் மூலமும் பயனுள்ள மற்றும் நிலையான எடை இழப்பை பெறலாம் எனக் கூறுகிறார்கள்.

foods-to-stock-up-in-your-fridge-for-a-quick-weight-loss-in-tamil

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம். அவை திறம்பட உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன மற்றும் உங்கள் திடீர் பசி வேதனையை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

ஆரோக்கியமான புரதங்கள் உங்களை வேறொரு உணவை பாதையில் செல்லாமல் தடுக்கும். நீங்கள் எண்ணெயில் பொரித்த சிற்றுண்டியை விரும்புபவராக இருந்தால், அந்த ஆரோக்கியமற்ற உணவுகளை வேகவைத்த முட்டைகளுடன் மாற்றவும். அவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, சிற்றுண்டி சாப்பிட நினைக்கும் போது, சில அமினோ அமிலங்கள் நிறைந்த முட்டைகளை சாப்பிட்டு மகிழுங்கள். இது பசியைத் தணிப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

வறுத்த மற்றும் வேகவைத்த உணவுகள்

வறுத்த மற்றும் வேகவைத்த உணவுகள்

வறுத்த அல்லது வேகவைத்த உணவுகளை சாப்பிடுங்கள். வறுத்த பருப்புகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுக்கப்பட்ட குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, வறுத்த கொண்டைக்கடலை, வேகவைத்த பச்சை பட்டாணி, வறுத்த நட்ஸ்கள் போன்றவற்றை உங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வையுங்கள். பசி எடுக்கும் போதெல்லாம், எளிதில் சாப்பிடக்கூடிய வகையில், அவற்றை கைவசம் வைத்திருங்கள்.

உறைந்த பெர்ரிகள்

உறைந்த பெர்ரிகள்

உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் முதலிலே ஆரோக்கியமான உணவுகளை வைப்பது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிக்கான உங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்பினால், அவற்றை உறைந்த பெர்ரி அல்லது உலர்ந்த பழங்களுடன் மாற்றுவது சிறந்தது. இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் உட்கொள்ளலைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊக்கத்தை அதிகரிக்கும்.

பருவகால காய்கறிகள்

பருவகால காய்கறிகள்

பலர் நள்ளிரவில் நூடுல்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அது நிச்சயமாக அனைத்து கொழுப்பு இழப்பு முயற்சிகளையும் அழிக்கிறது. எனவே, வல்லுநர்கள் பருவகால காய்கறிகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். ஒரு எளிய முட்டை அல்லது காய்கறி தோசை செய்து ஒருசில நிமிடங்களில் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் சுவையான முறையில் பசியை சமாளிக்க முடியும்.

உறைந்த தயிர்

உறைந்த தயிர்

உங்கள் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் ஆசைகளை ஆரோக்கியமான மற்றும் குறைந்த உறைந்த தயிருடன் மாற்றுவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் வீட்டில் கொஞ்சம் பழ தயிர் தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருங்கள். இதனால் சர்க்கரை நிறைத்த பானங்களை நீங்கள் குடிக்காமல் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods to stock up in your fridge for a quick weight loss in tamil

Here we are talking about the foods to stock up in your fridge for a quick weight loss in tamil.
Story first published: Sunday, January 29, 2023, 12:11 [IST]
Desktop Bottom Promotion