For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

By Maha
|

பலரும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யும் முன் ஒருசில விஷயங்களை தவறாமல் பின்பற்றினால் தான், ஜிம் செல்வதன் முழு பயனையும் பெற முடியும். அதுமட்டுமின்றி, உடல் விரைவில் சிக்கென்று மாற வேண்டுமென்று, அளவுக்கு அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடலுக்கு தீமையைத் தான் விளைவிக்கும்.

இங்கு ஜிம் செல்லும் முன் ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் மனதில் கொண்டு செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடவும்

கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடவும்

உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் ஆற்றல் வேண்டும். எனவே ஜிம் செல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து, எப்போதும் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஜிம் செல்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளான கோதுமை பிரட், கார்ன் ப்ளேக்ஸ், ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

வார்ம் அப் அவசியம்

வார்ம் அப் அவசியம்

எந்த ஒரு உடற்பயிற்சியில் இறங்கும் முன்பும், வார்ம் அப் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால், உடற்பயிற்சிக்கு பின் தசைப் பிடிப்புகள், வலிகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வார்ம் அப் செய்து வந்தால், உடற்பயிற்சியினால் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வை வெளியேறக்கூடும். இதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இதன் மூலம் உடல் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

டியோடரண்ட்

டியோடரண்ட்

நீங்கள் சிக்ஸ் பேக் வைக்க கடுமையான உடற்பயிற்சியை செய்து வருவீர்கள். அப்போது வியர்வை அதிகம் வெளிவரும். வியர்வை அதிகம் வெளிவருவதால், நாற்றம் வீசக்கூடும். எனவே உடற்பயிற்சி செய்யும் முன் டியோடரண்ட் பயன்படுத்தினால், வியர்வை நாற்றம் தடுக்கப்படுவதோடு, உங்களருகில் உடற்பயிற்சி செய்பவர்களும் அசௌகரியமாக உணரமாட்டார்கள்.

காபி

காபி

ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு கப் காபி குடித்தால், சோர்வு நீக்கப்பட்டு, உடற்பயிற்சியின் போது நன்கு செயல்பட முடியும் என்று சொல்கிறது. இதற்கு காபியில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு கப் காபி குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Things You Should Do Before Your Gym Session

If you want to get the best out of your workouts, just pushing yourself to cross your limit every time isn’t enough. You need to do the right things too. Here are some things you should do before working out in the gym.
Story first published: Monday, March 30, 2015, 10:47 [IST]
Desktop Bottom Promotion