For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

By Maha
|

உணவுகள் தான் உடலின் எரிபொருள். அத்தகைய உணவைம் காலையில் ஜிம் செல்லும் போது அவசியம் சாப்பிட வேண்டும். அதேப்போல் ஜிம் செல்லும் முன், எதையாவது சாப்பிட முடியாது. சரியான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்து வர வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஜிம் செல்லும் முன், உடலில் கிளைகோஜன் அளவை அதிகமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவை குறைவாக இருந்தால், சோர்வு மற்றும் உடலின் ஆற்றலானது குறைந்துவிடும். எனவே ஜிம் செல்வதற்கு 1-2 மணிநேரத்திற்கு முன்பே நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து வர வேண்டும். அதிலும் காலையில் ஜிம் செல்பவர்களாக இருந்தால், சற்று ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து வர வேண்டும். அத்துடன் 1-2 மணிநேரத்திற்கு முன்பு நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, காலையில் ஜிம் செல்லும் முன், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை, 2 மணிநேரத்திற்கு முன்பே வயிறு நிறைய உட்கொண்டால், உடலின் குளுக்கோஸானது சீராக இருந்து, உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றல் கிடைக்கும்.

இங்கு ஜிம் செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றை ஜிம் செல்லும் முன் உட்கொண்டு வந்தால், உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்

பிரட் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்

2 துண்டு கோதுமை பிரட்டில் 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் பழங்கள்

ஓட்ஸ் மற்றும் பழங்கள்

ஒரு பௌல் ஓட்ஸில் பால் மற்றும் பெர்ரிப் பழங்கள் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஆப்பிள் மற்றும் வால்நட்ஸ்

ஆப்பிள் மற்றும் வால்நட்ஸ்

1/4 கப் ஆப்பிள் மற்றும் வால்நட்ஸை சாப்பிட வேண்டும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ஆலிவ் எண்ணெயில் ப்ராக்கோலியை போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கி 1/2 கப் சாப்பிட வேண்டும்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

சோயா பால் கொண்டு பிடித்த பழங்களால் செய்யப்பட்ட ஃபுரூட் ஸ்மூத்தி 1 டம்ளர் குடிக்க வேண்டும்.

தயிர் மற்றும் ப்ளூபெர்ரி

தயிர் மற்றும் ப்ளூபெர்ரி

1/4 கப் தயிரில் 3/4 கப் ப்ளூபெர்ரி சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

2 வாழைப்பழம் சாப்பிட்டு ஜிம் செல்வதும் மிகவும் சிறந்தது.

உலர் திராட்சை

உலர் திராட்சை

ஒரு கையளவு உலர் திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேக வைத்த முட்டை

வேக வைத்த முட்டை

முக்கியமாக வேக வைத்த முட்டை 1 சாப்பிட வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறியவற்றை ஜிம் செல்லும் ஒரு மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றலானது கிடைத்து, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men Should Eat Before Going to Gym

A heavy breakfast is required before going to gym in the morning. Here is a list of foods that men should take before going out to gym.
Story first published: Wednesday, July 2, 2014, 11:13 [IST]
Desktop Bottom Promotion