Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
அடிக்கிற வெயிலுக்கு 10 நிமிடத்தில் இந்த கேரளா ஸ்டைல் மோர் குழம்பை செஞ்சு சாப்பிடுங்க.. இதமா இருக்கும்..
Kerala Style Moru Curry Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது, காரசாரமாக சாப்பிடுவதை விட, உடலுக்கு இதமளிக்கும் வகையிலான உணவை சமைத்து சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.
உங்களுக்கும் அப்படி வாய்க்கு ருசியான, அதே சமயம் வெயில் நேரத்தில் உடலுக்கு இதமளிக்கும் வகையில் சாதத்துக்கு ஒரு சைடு டிஷ்ஷை செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரளா ஸ்டைல் மோர் குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* சின்ன வெங்காயம் - 5
* பச்சை மிளகாய் - 4
* தேங்காய் - 1 சின்ன மூடி (துருவியது)
* மாங்காய் இஞ்சி - 3 இன்ச்
* சீரகம் - 1 1/4 டீஸ்பூன்
* லேசாக புளித்த கெட்டி தயிர் - 1/2 லிட்டர்
* மோர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய
தேங்காய், நறுக்கிய மாங்காய் இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், லேசாக புளித்த கெட்டி தயிரை பாதி சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மீதமுள்ள தயிரை சேர்த்து, மத்து பயன்படுத்தி நன்கு
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் அரைத்ததை ஊற்றி, அத்துடன் 1 கப் மோர்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அந்த வாணலியை அப்படியே அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.
ஆனால் கொதிக்கவிட்டு விடக்கூடாது.
* குழம்பு சூடானதும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், விதைகளை நீக்கிய வரமிளகாயை சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சிறிது
உப்பு சேர்த்து நன்கு வதக்கி, குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான
கேரளா ஸ்டைல் மோர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











