Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு அசைவ சுவையில் சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Soya Chunks Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் என்றால் ரொம்ப பிடிக்குமா? சப்பாத்தி அல்லது பூரி செய்தாலே, அதற்கு மீல் மேக்கரை தான் அடிக்கடி சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அப்படியானால் ஒரே சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்யாமல், ஒருமுறை மசாலா அரைத்து மீல் மேக்கர் கிரேவியை செய்யுங்கள்.
இப்படி கிரேவி செய்யும் போது, அது நாண்-வெஜ் சுவையில் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இப்படி கிரேவி செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, புலாவ் உடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* தண்ணீர் -
* உப்பு - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5
* இஞ்சி - 3 இன்ச்
* பூண்டு - 10 பல்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 400 மிலி
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 1/2
டீஸ்பூன் உப்பை சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு, அதில் 1 கப் மீல் மேக்கரை சேர்த்து, மூடி வைத்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மீல் மேக்கரில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு,
குளிர்ந்த நீரில் 2-3 முறை அலசி, நீரை கைகளால் நன்கு பிழிந்துவிட்டு,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி,
வெங்காயம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய்
பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம்
வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 400 மிலி நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 4 நிமிடம்
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி, மூடி
வைத்து, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும், அதில் கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications