Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1 கப் அவலும், தேங்காயும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிட்டு பாருங்க..
Aval Upma Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? மேலும் உங்கள் வீட்டிலும் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலுடன் தேங்காயை சேர்த்து, தேங்காய் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.
இந்த உப்புமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதுவும் வேலைக்கு செல்வோர், பேச்சுலர்கள் போன்றோருக்கு ஏற்ற ரெசிபி. உப்புமா பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இந்த தேங்காய் அவல் உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி அவல் - 250 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4 (உடைத்தது)
* பச்சைமிளகாய் - 2 (உடைத்தது)
* வரமிளகாய் - 2 (உடைத்தது)
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கெட்டி அவலை நீரில் 2-3 முறை கழுவி, அதில் நீரை ஊற்றி,
10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அவலில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த வேர்க்கடலை, உடைத்த முந்திரியை சேர்த்து 1
நிமிடம் வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஊற வைத்து வடிகட்டி வைத்துள்ள அவலை சேர்த்து, நன்கு கிளறி
விட வேண்டும். அவல் நன்கு சூடானதும், அதில் கொத்தமல்லியை சிறிது தூவி
கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் அவல் உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications