Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
சேமியா உப்புமாவை ஒருடைம் இந்த மாதிரி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Semiya Upma Recipe In Tamil: உப்புமா என்றாலே உங்கள் வீட்டில் உள்ளோர் தலைதெறிக்க ஓடுவார்களா? அதற்கு நீங்கள் செய்யும் பக்குவம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆம், நல்ல பக்குவத்தில் உப்புமா செய்தால், அதுவும் சேமியாவைக் கொண்டு உப்புமா செய்தால், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இன்று உங்கள் வீட்டில் உப்புமா செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் உப்புமாவை செய்யுங்கள். இதனால் நிச்சயம் அனைவரும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இதில் வேர்க்கடலை, முந்திரி எல்லாம் சேர்க்கும் போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேமியா - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 50 கிராம்
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3/4 கப் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அந்நீரில் சேமியாவை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில்
வைத்து கிளறி, நீர் வற்றி நன்கு வெந்ததும் இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால் , சுவையான சேமியா உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications