Latest Updates
-
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா?
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
Tomato Garlic Egg Rice Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்கு என்ன லன்ச் கொடுப்பது என்று யோசித்து முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? பெரும்பாலும் நீங்கள் வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? அதுவும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் தான் செய்வீர்களா? இதனாலேயே உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடாமல் மிச்சம் வைக்கிறார்களா?

அப்படியானால் ஒருமுறை லன்ச் பாக்ஸிற்கு தக்காளி பூண்டு முட்டை சாதம் செய்து கொடுங்கள். இந்த சாதத்தை செய்தால், நிச்சயம் உங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி இந்த சாதத்தை செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.
உங்களுக்கு இந்த தக்காளி பூண்டு முட்டை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பூண்டு முட்டை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 1/4 கப்
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 4
* வேக வைத்த பாசுமதி அரிசி - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை மற்றும்
மிளகாய் தூள் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வெங்காயத்தை நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்ததை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி நன்கு மசாலா சாதத்துடன் ஒன்று சேரும் வரை கிளறி
இறக்கினால், சுவையான தக்காளி பூண்டு முட்டை சாதம் தயார்.



Click it and Unblock the Notifications