Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Murungai Keerai Kadayal With Vazhaikai Varuval Recipe In Tamil: மதியம் வந்தாலே என்ன சமைப்பது என்று தெரியாமலும், சரியான முடிவெடுக்க முடியாமலும் இருப்போம். அப்படியே ஒரு முடிவை எடுத்தாலும், அது சமீபத்தில் சாப்பிட்டது போன்று இருக்கும். இதனாலேயே முடிவெடுப்பது சிரமமாக இருக்கும். உங்களின் சிரமத்தை குறைக்க ஒரு அற்புதமான லஞ்ச் காம்போவை தான் இங்கு கொடுத்துள்ளோம். அது தான் முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும். இந்த காம்போ மிகவும் சுவையாக இருப்பதோடு சத்தானதும் கூட. இந்த காம்போவை வீட்டில் உள்ளோருக்கு செய்தால், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கடையல் மற்றும் வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் வறுவலுக்கு..
* வாழைக்காய் - 1 (தோல் நீக்கி வட்ட துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடையலுக்கு..
* துவரம் பருப்பு - 75 கிராம் (கழுவி ஊற வைத்தது)
* சின்ன வெங்காயம் - 8
* பெரிய பூண்டு -
* பச்சை மிளகாய் - 3
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 1 கட்டு
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, ஓரளவு மெல்லிய வட்டத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சிறிது நீரை தெளித்து நன்கு மசாலா
வாழைக்காயில் படும்படி பிரட்டிவிட்டு, மூடி வைத்து ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு, அதில்
சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், மஞ்சள்
தூள் சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து ஒரு வாணலியில் பருப்பை நீருடன்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த
முருங்கைக்கீரையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, முருங்கைக்கீரையை 5
நிமிடம் வேக வைக்க வேண்டும். முக்கியமாக கீரையை மூடி வைத்து வேக வைக்க
வேண்டாம்.
* முருங்கைக்கீரை வெந்ததும், அதை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான
நீரை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளித்து, கீரையுடன்
சேர்க்க வேண்டும்.
* பிறகு மண் சட்டியில் அந்த கீரையை போட்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மத்து கொண்டு கடைந்து விட வேண்டும். இல்லாவிட்டால்
மிக்சர் ஜாரில் சேர்த்து, ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் கடைந்த கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, எடுத்து
வைத்துள்ள பருப்பு நீரை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* அடுத்து கீரை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்து கலந்தால்,
முருங்கைக்கீரை கடையல் தயார்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை
சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால்,
சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications