Latest Updates
-
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது?
Face Pack Vs Face Mask: சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் சரும பராமரிப்புகளில் ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவை பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நிறைய பேர் இவ்விரண்டும் ஒன்று என்று நினைக்கின்றனர். ஆனால் இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இருப்பினும் இவ்விரண்டுமே சருமத்தை பொலிவோடும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உங்களுக்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன, அதன் நன்மைகள் என்ன, எந்த சருமத்தினர் எதை பயன்படுத்துவது நல்லது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஃபேஸ் பேக் என்றால் என்ன?
ஃபேஸ் பேக் என்பது முகத்தில் தடவி காய வைத்து, பின்னர் கழுவக்கூடிய ஒரு கெட்டியான மற்றும் தடிமனான பேஸ்ட் ஆகும். இந்த ஃபேஸ் பேக்குகளானது களிமண், மூலிகைகள், பழங்கள் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதுவும் இவை சருமத்தை சுத்தம் செய்து ஊட்டமளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக ஃபேஸ் பேக்கில் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சவும், சருமத்துளைகளை திறக்கவும், சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றவும் சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களாவன முல்தானி மெட்டி, சந்தன பவுடர், கடலை மாவு, மஞ்சள், பப்பாளி, வாழைப்பழம் போன்றவை.
ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
* ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத் துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்குகின்றன.
* இறந்த செல்களை வெளியேற்றி பொலிவான மற்றும் மென்மையான சருமத்தை பெற உதவுகின்றன.
* சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதால், எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் முகப்பரு சருமத்தினருக்கு ஏற்றவை.
ஃபேஸ் பேக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
* ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவினால் நன்கு காய வைத்த பின் கழுவ வேண்டும்.
* ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் மாஸ்க் என்றால் என்ன?
ஃபேஸ் மாஸ்க் என்பது மெல்லிய, ஜெல் போன்ற அல்லது தாள் வடிவிலான தயாரிப்பாகும். இதை முகத்தில் தடவி சிறிது நேரம் காய வைத்தால், முகத்தில் இருந்து உரித்தெடுப்பது போன்று அல்லது கழுவுவது போன்று இருக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க, முதுமையைத் தடுக்க என சரும பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ் பேக்குகளைப் போலல்லாமல், ஃபேஸ் மாஸ்க்குகள் இலேசான பதத்தில் இருப்பதுடன், சருமத்தை முழுமையாக உலர்த்தாமல் அகற்றுவது போன்று இருக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க்குகளில் ஹையலூரோனிக் அமிலம், வைட்டமின் சி அல்லது ரெட்டினால் போன்ற பொருட்கள் இருக்கும். இவை சருமத் துளைகளின் ஆழம் வரை ஊடுருவி, சிறப்பான பலன்களைத் தரும்.
ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
* ஃபேஸ் மாஸ்க்குகளானது சரும வறட்சி, பொலிவின்மை, முதுமை போன்ற சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் படி சிகிச்சைகளை வழங்குகிறது.
* ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தினுள் ஆழமாக ஊடுருவி நல்ல தீர்வு தரும்.
* முக்கியமாக ஃபேஸ் மாஸ்க்குகள் ஸ்பா போன்ற அனுபவத்தை வழங்கும்.
* ஃபேஸ் மாஸ்க்குகளானது வறண்ட சருமம், சென்சிடிவ் சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் காம்பினேஷன் சருமம் போன்ற சரும வகைகளுக்கு ஏற்றவாறு உள்ளன.
ஃபேஸ் மாஸ்க் போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
* ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவினால் 15-20 நிமிடங்களுக்கு மேல் வைக்கக்கூடாது.
* சரும வகை மற்றும் மாஸ்க் வகையைப் பொறுத்து, வாரத்திற்கு 1-3 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications