Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ!
Egg Alternatives in Tamil: மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாது. ஏனெனில் இது தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்தாகும். இப்படிப்பட்ட புரோட்டீன் முட்டையில் ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் இதில் உயர்தர புரோட்டீன் உள்ளது. இதனால் இந்த புரோட்டீனை பெற தினமும் இந்த முட்டை மக்கள் தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால் தற்போது முட்டையின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டதால், மக்கள் பலரும் முட்டைக்கு சிறந்த மாற்று உணவை தேடுகின்றனர். ஒரு முட்டைக்கு இவ்வளவு செலவழித்து புரோட்டீனை பெறுவதற்கு பதிலாக, முட்டைக்கு இணையான புரோட்டீன் சத்தை கொண்ட சைவ உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது மட்டுமின்றி, செலவும் குறைவு.
நீங்களும் முட்டையின் விலை உயர்வால் அதற்கு இணையான புரோட்டீனைக் கொண்ட சைவ உணவுகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? டாக்டர் பிரகாஷ்மூத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டைக்கு இணையான புரோட்டீனைக் கொண்ட சைவ உணவுகளை பகிர்ந்துள்ளார். அதுவும் சைவ உணவில் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பகிர்ந்து கொண்டார். அதை அறிய தெரிந்து கொள்ளுங்கள்.
காலை உணவு
"காலையில் வெறும் இட்லி, தோசை, பொங்கல் என்று மட்டும் சாப்பிடாமல், 4 இட்லி சாப்பிடுவதற்கு பதிலாக 2 இட்லியை சாப்பிட்டு, அத்துடன் 50 கிராம் நிலக்கடலையோ, முளைக்கட்டிய பச்சை பயறோ சேர்த்துக் கொள்ளலாம். பச்சை பயறை முளைக்கட்ட வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள ஆன்டி-நியூட்ரியண்ட்ஸான பைட்ரேட்ஸ் குறைந்து, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். எனவே முளைக்கட்டிய பச்சை பயறு காலை உணவோடு சேர்த்து சாப்பிடுவது சிறந்தது" என்று கூறினார்.
மதிய உணவு
"மதிய உணவோடு கண்டிப்பாக புரோட்டீன் சத்து நிறைந்த ஏதாவது ஒரு உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் வெள்ளை சுண்டல், கருப்பு, சுண்டல், சோயா பீன்ஸ், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ராஜ்மா, வெள்ளையாக பெரியதாக இருக்கும் டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி, மீல் மேக்கர் போன்றவற்றை ஏதாவது காய்கறிகளோடு சேர்த்து உட்கொள்ளலாம்" என்று கூறினார்.
இரவு உணவு
"இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி, கோதுமை தோசை போன்றவற்றை தான் சாப்பிடுவார்கள். சப்பாத்தி மாவு அரைக்கும் போது, அதில் வெறும் கோதுமையை மட்டும் சேர்க்காமல், அத்துடன் அதற்கு சம அளவில் வெள்ளை சோளம், சிறுதானியங்களிலேயே புரோட்டீன் அதிகம் இருக்கக்கூடிய அமரந்த், சிறிது கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து அரைத்தால், அருமையான புரோட்டீன் நிறைந்த சப்பாத்தி மாவு தயார்.
இதற்கு சைடு டிஷ்ஷாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம். புரோட்டீனும் கொழுப்பும் சேரும் போது சைவ உணவுகளில் Bio-availability இன்னும் அதிகரிக்கும். இதன் DIAAS ஸ்கோர் 100-ஐ விட குறைவாகத் தான் இருக்கும். எனவே பன்னீர், தயிர் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது உடலில் புரோட்டீனை உறிஞ்சுவது அதிகரிக்கும்" என்று கூறினார்.
புரோட்டீன் நிறைந்த உணவை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை வராதா?
"புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கூறும் போது பலரும் கேட்கும் கேள்வி, புரோட்டீன் நிறைந்த உணவை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை வராதா என்பதாகவே இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு புரோட்டீன் உணவை எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 50-60 கிராம் புரோட்டீன் தான் கிடைக்கும். வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு தாராளமாக 60 கிராம் புரோட்டீனை எடுத்துக் கொள்ளலாம். இதனால் சிறுநீரகம் பாழாக வாய்ப்பே இல்லை.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக உணவுக்கு செலவழிக்க யோசிக்காதீர்கள். நல்ல ஆரோக்கியமான உணவுகளை வாங்கி உட்கொள்ளும் போது கால் வலி, மூட்டு வலி, இரத்த சர்க்கரை அதிகரிப்பது போன்ற எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டி வராது. இதனால் மருத்துவமனை செலவு குறையும்." என்றும் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


