Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
Surakkai Pachadi Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடிஷ் செய்வதென்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி அரைத்து போரடித்து விட்டதா? ஏதாவது புதிய சட்னி அரைக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் இருக்கிறதா? அப்படியானால் அந்த சுரைக்காயை வைத்து அருமையான சுவையில், தேங்காய் சட்னியே தோற்றுப் போகும் அளவில் அட்டகாசமான சட்னி செய்யுங்கள்.
சுரைக்காயை வைத்து எப்படி சட்னி செய்வதென்று ஆச்சரியப்படுகிறீர்களா? உண்மைதான், செட்டிநாடு வட்டாரத்தில் சுரைக்காய் பச்சடி என்று அழைக்கப்படும் இந்த சுரைக்காய் சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும், அதே சமயம் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த சுரைக்காய் பச்சடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 1/2 கப் சுரைக்காய்
- 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 2 வர மிளகாய்
- 3 பச்சை மிளகாய்
- 5 பூண்டு பல்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடாக்கி, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து பருப்புகள் நிறம் மாறவும் வரை வறுக்கவும்.
- பின்னர் இதை எடுத்து தனியாக வைக்கவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில் பூண்டு, வர மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கி இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் சேர்த்து, காய்கறியின் பச்சைத்தன்மை போய் தண்ணீர் ஆவியாகும் வரை வதக்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும், முதலில் பருப்பு வகைகளை கரகரப்பாக அரைத்து, மீதமுள்ள வதக்கிய பொருட்களை புளி சாறு, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும்,
- பின்னர் உளுந்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க விடவும், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- இதை அரைத்த சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான சுரைக்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











