Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
Godhumai Rava Adai Recipe in Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையை வைத்து வழக்கம் போல உப்பு செய்யாமல், அடை செய்து சாப்பிடுங்கள்.
இந்த அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட வித்தியாசமான சுவையில், அதே வேளையில் சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு மொறுமொறுவென்றும் இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு இது சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் இதை எளிதில் செய்து விடலாம்.

உங்களுக்கு கோதுமை ரவை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊறவைக்க:
- 1 கப் கோதுமை ரவா
- ¼ கப் துவரம் பருப்பு
- ¼ கப் கடலை பருப்பு
- ¼ கப் பாசிப்பருப்பு
- ¼ கப் உளுத்தம் பருப்பு
- 3 வர மிளகாய்
- 6 பூண்டு பல்
அடை செய்ய:
- ¼ கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில், ஊற வைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போதுமான தண்ணீரில் ஊறவைத்து, 4 முதல் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- காலையில் நன்றாக கழுவி வடிகட்டி விட்டு மிகவும் குறைவான அளவு தண்ணீரைச் சேர்த்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அரைத்த மாவில், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், உப்பு, சீரகத் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
- அடை சுட ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- ஒரு கரண்டி மாவை எடுத்து நீங்கள் விரும்பும் தடிமனுக்கு அடையை ஊற்றவும். மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் மெலிதாக ஊற்றவும்.
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சுற்றிலும் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- இருபுறமும் வெந்ததும் தோசைக்கல்லிலிருந்து தட்டுக்கு மாற்றவும்.
- சூடான அடையை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications