Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Moongil Arisi Kichadi Recipe In Tamil: உங்களுக்கு தினமும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் மூங்கில் அரிசி உள்ளதா? பொதுவாக மூங்கில் அரிசியைக் கொண்டு கஞ்சி செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த அரிசியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிச்சடி செய்யலாம் தெரியுமா?
இப்படி கிச்சடி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதுவரை மூங்கில் அரிசியை கஞ்சியாக சாப்பிடாதவர்கள், கிச்சடியாக செய்யும் போது கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மூங்கில் அரிசி கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூங்கில் அரிசி கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மூங்கில் அரிசி - 1 கப்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* நெய் - 1 ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* முந்திரி - 10
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 3
* புதினா - 1 கைப்பிடி
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மூங்கில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கழுவிய அரிசியை சேர்த்து, நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த அரிசியை சேர்த்து கொரகொரவென்று
பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி சேர்த்து நன்க
வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொடியாக நறுக்கிய
தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 3 பச்சை மிளகாயை லேசாக கீறி போட்டு, அத்துடன் புதினா,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு 2-3
நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி கொதி வந்ததும், அரைத்து
வைத்துள்ள மூங்கில் அரிசி பொடியை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து
வேண்டுமானால் உப்பை சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத்
தூவி பரிமாறினால், சுவையான மூங்கில் அரிசி கிச்சடி தயார்.



Click it and Unblock the Notifications