For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடியும் வனமகனும் - வைரலாகும் இந்த வனமகன் யார்? தெரிஞ்சிக்கணுமா?

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போதைய சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதில் எப்பொழுதும் ஆர்வமாக இருந்து வருகிறார். இவர் போட்ட ட்வீட்டுகள், சேலஞ்ச், கருத்துகள் எல்லாமே மக்களால் பேசப்பட்டது.

|

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போதைய சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதில் எப்பொழுதும் ஆர்வமாக இருந்து வருகிறார். இவர் போட்ட ட்வீட்டுகள், சேலஞ்ச், கருத்துகள் எல்லாமே மக்களால் பேசப்பட்டது. அதிலும் மிமீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு எளிதில் இவருடைய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எளிதாக பரவலாகி விடும்.

PM Modi

இந்த பட்டியலில் தற்போது டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற மேன் vs வொயில்டு நிகழ்ச்சியும் இடம் பிடித்து உள்ளது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் எபிசோடு தற்போது நேரலைக்கு வந்துள்ளது. இதைப் பார்த்த நம் மிமீம்ஸ் கிரியோட்டர்கள் இது குறித்து நிறைய கேளிக்கையான மிமீம்ஸ்களை போட்டு வருகிறார்கள். இது தான் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாக பேசப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பியர் கிரில்ஸ் மற்றும் மோடி

பியர் கிரில்ஸ் மற்றும் மோடி

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பிரபல சாகச வீரர் பியர் கிரில்ஸும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாகச் சென்று, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மோடியின் குழந்தைப் பருவம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடி உள்ளனர்.

"எனது குழந்தைப் பருவத்தில் இந்த மாதிரியான அதிநவீன டெக்னாலஜி இல்லை" ஏழ்மை நிலையில் தான் வளர்ந்து வந்தேன். அப்பொழுது எல்லாம் எங்க வீட்டில் ஐயர்ன் பாக்ஸ்லாம் கிடையாது. பள்ளிக்கு போக என் சட்டையை அயர்ன் பண்ண காப்பர் கிண்ணத்தில் நிலக்கரியை போட்டு சூடாக்கி பயன்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

இந்த 18 வருடங்களில் நான் இதுவரை விடுமுறை எடுத்ததில்லை. இப்படி இயற்கையோடு களிக்கும் நேரத்தை இன்று நான் என் விடுமுறையாக கருதுகிறேன். என்று கூறியுள்ளார்.

MOST READ: உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...

ட்வீட்டரில் பரவல்

ட்வீட்டரில் பரவல்

உடனே இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான சில தினங்களிலயே ModionDiscovery என்ற தலைப்பில் ட்வீட்டரில் பரவ தொடங்கி விட்டது. நம்ம மிமீம்ஸ் கிரியோட்டர்களும் தங்களுடைய கருத்துக்களை போட ஆரம்பித்து விட்டார்கள்.

மிமீம்ஸ்

மிமீம்ஸ்

ஒரு நெட்டிசன் தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் - திரைப்படத்தின் பிரபலமான உரையாடலை பயன்படுத்தி இதற்கு மிமீம்ஸ் போட்டுள்ளார். " ஹவ் இஸ் தி ஜோஷ்? ". ஜோஷ் எப்படி இருக்குது என்று கேளிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன் தனது வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' நிகழ்ச்சியின் போது அவர் ஆற்றிய உரைகளுடன் இதை ஒப்பிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் மோடியிடம் இது குறித்து ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்." இப்படி மாத்தி மாத்தி ஹிந்தி பேசுறீங்களே ஜி நம்ம பியர் கிரில்ஸ்க்கு புரிஞ்சதா" என்று நகைச்சுவை கேள்வி எழுப்பியுள்ளார்.

MOST READ: உங்க ஃபேவரட் ஹீரோ, ஹீரோயின்கள் வேற என்ன சைடு பிசினஸ் பண்றாங்கனு தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

டிஆர்பி

டிஆர்பி

இன்னொரு நெட்டிசன் " பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக டிஸ்கவரி சேனலுக்கு டிஆர்பியை ஏத்தி கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் ".

எது எப்படியோ மோடி அவர்கள் ட்வீட்டை விட மாட்டார், நம்ம மிமீம்ஸ் கிரியோட்டர்கள் மோடியை விட மாட்டார்கள். அப்புறம் என்னங்க இது குறித்து உங்க மிமீம்ஸ் என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Man Vs Wild Episode Featuring PM Modi Is Trending Online, Netizens Create Funny Memes.

The Indian Prime Minister Narendra Modi has been a Prime Minister of many firsts. Debuting in Discovery channel's popular show Man Vs Wild, added to that list. An episode of the show featuring PM Modi went live recently and the social media platforms exploded with numerous funny memes and comments.
Desktop Bottom Promotion