For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள! செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு

செல்ஃபி எடுக்கும் போது நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது இந்த கட்டுரை. செல்ஃபி எடுக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

|

இன்றைக்கு ஸ்மார்ட் போன் கையில் வைத்திருக்கும் பலரும் செல்ஃபி அடிக்ட்டாக இருக்கிறார்கள். எங்கு நின்றாலும் ஒரு செல்ஃபி. காலை எழுந்ததும் செல்ஃபி எடுத்து தங்களின் சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் தான் அன்றைய நாளே துவங்கியதாக பலருக்கும் இருக்கிறது.

இன்றைக்கு செல்ஃபி டே வேறு என்று சொல்லிவிட்டதால் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செல்ஃபி எடுக்கும் போது எத்தனையோ செல்போனில் தெரிகிற முகத்தை மட்டுமே கவனம் செலுத்துவோம் அதன் பின்னணியில் தெரிகிற விஷயங்களை பல நேரங்களில் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

செல்ஃபி எடுத்து தமாஷாகிப் போன பல செல்ஃபிக்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.அவற்றின் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தோழிகள் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுக்க நினைத்திருக்கிறார்கள். அங்கே செல்ஃபி எடுக்க தலையணை அருகில் தப்பி வந்த ஸ்பைடர் வந்திருக்கிறது. எதோ அசைவது போல இருப்பதைப் பார்த்து தோழி பயந்து அலறுவதை கூட கண்டு கொள்ளாமல் அப்படியே செல்ஃபி எடுத்துக் கொண்டேயிருந்திருக்கிறார் தோழி.... நல்ல ஃபிரண்டும்மா

இன்னும் கொஞ்சம் உத்துப் பாருங்க அது ஒரிஜினல் சிலந்தி இல்ல..... பிரிண்ட் ஆகியிருக்கிற சிலந்தி படம். இதுக்கே இவ்ளோவா? அப்போ ஒரிஜினல் சிலந்தி வந்தா??

 #2

#2

குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பது போல போட்டோ எடுத்திருக்கிறார். அப்பாவுக்கு சமத்தாக போஸ் கொடுக்கும் பாப்பா பின்னால் இருக்கும் நாய் என்னவோ பண்ணுது....உவ்வேக்... அதெல்லாம் இருக்கட்டும் அப்பாவுக்கு எத்தன பல் இருக்கு பாருங்க

#3

#3

எல்லாரும் கும்பலா நின்னு செல்ஃபி எடுக்குறாங்க இதுல என்ன இருக்கு என்று தேடுகிறீர்களா? இந்த கும்பல்ல எந்த பிரச்சனையும் இல்ல.... பின்னாடி கண்ணாடில பாருங்க.... ஏம்பா செல்ஃபி எடுக்க வேற இடமா கிடைக்கல

 #4

#4

அம்மணி என்ன செய்றீக????? மஞ்ச லைட்ட பாத்ததும் நம்ம முகத்துக்கு கரெக்டா இருக்குமேன்னு ஈன்னு போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்த அம்மணி எதிர்ல கண்ணாடி இருக்குன்றதையே மறந்துட்டாங்களே.... அதையும் அப்படியே ஷேர் பண்ண லைக்ஸ் மட்டுமல்ல கமெண்ட்ஸும் சும்மா பிச்சுகிச்சு

#5

#5

க்யாரே டிராஃபிக்கா???. நான் ரொம்ப பிஸி நான் ரொம்ப பிஸி என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டு மனதை தேற்றுவது போலத்தான் இதுவும். சாலையில் ஒரு ஈ,காக்கா கூட இல்லை ஒ வீட்டிலிருந்து கிளம்பும் போதே தாமதமாக கிளம்பிய பெண்மணி ஏன் லேட்டுன்னு கேட்டா எதாவது சாக்கு சொல்லணுமே என்று யோசித்தவர், வர்ற வழில செம்ம டிராபிக் தெரியுமா என்று கதை சொல்ல முடிவெடுத்துவிட்டார் அதோடு விட்டிருக்கலாம்.

அந்த பொய்யை உண்மையாக்குகிறேன் என்று சொல்லி செல்ஃபி எடுத்து மொத்த கதையையும் சொதப்பி விட்டார்.

#6

#6

நம்ம ஒரு ஃப்லோல செல்ஃபி எடுக்க கூட இருக்குறவங்க ஊடால புகுந்து எதாவது ஏடாகூடம் பண்ணி வச்சிடுவாங்க.... இங்க மக ஒரு போஸ் கொடுக்க பின்னாடி அப்பா கொடுத்த போஸ் தான் ஹைலைட் .

அத கவனிக்காம முகநூல்ல போட அப்பாக்குத் தான் அதிக லைக்ஸ்!

#7

#7

என்ன கட்டதுரை இவ்ளோ வெரப்பா நிக்கிறாரே.... என்னவா இருக்கும்னு யோசிக்காதீங்க சார தனியா விட்டுட்டு அவங்க கேர்ல் ஃபிரண்ட் ஷாப்பிங் போய்ட்டாங்க போல.... நான் தனியா இருக்கேன்ன்றத கோவமா செல்ஃபி எடுத்து அனுப்ப எல்லாரும் ஆறுதல் சொல்வாங்கன்னு பாத்தா கலாய்ச்சு தள்ளிட்டாங்க. இன்னும் புரியலையா பின்னாடி தெரியுற கண்ணாடிய பாருங்க

 #8

#8

இந்த கண்ணாடி தான் பல நேரங்கள்ல நமக்கு எதிரியா இருக்கு. பேபிமா ஹேர்கட் பண்ணிட்டு அத ஃபிரஷ்ஷா போட்டு எடுத்து ஃபேஸ்புக்ல போட ட்ரை பண்ணியிருக்கு அழகான போஸ் கொடுத்துட்டே செல்ஃபி எடுக்க கஷ்டமா இருக்கவே பாய்ஃபிரண்ட கூப்டு எடுக்க சொல்லியிருக்காங்க... பாய்ஃபிரண்ட் போட்டோ எடுத்து கொடுக்க வீட்ல புள்ள மாட்டிகிச்சு

 #9

#9

எவ்வளவு நேரம் தேடினாலும் அப்டி ஒண்ணும் இதுல தப்பா தெரியலயேன்னு ஸ்க்ரோல் பண்ணி போய்ராதீங்க இரண்டு பேரும் முத்தம் குடுக்குறாங்க சரி இரண்டு பேருக்கும் நடுவுல புகுந்து ஒரு கண்ணு உத்துப் பாக்குதே கவனிச்சீங்களா?

#10

#10

டிரஸ்ஸிங் ரூம் போனா நமக்கு இதே வேலை தான்.... டிரஸ் வாங்குறோமோ இல்லையோ விதவிதமா டிரஸ் போட்டு போட்டு எடுத்துக்க வேண்டியது. மேடம் உள்ள வந்து பல மணி நேரம் ஆகியிருக்கும் போல என்னடா இம்புட்டு நேரமா ஆளக்காணோம் விட்டா இங்கயே செட்டில் ஆகிடும் போல ஒரு வேல புள்ள மறந்த வாக்குல தூங்கிடுச்சோன்னு வெளிய இருக்குற ஒரு அம்மா எட்டிப் பாக்க அதயும் கவனிக்காம மேடம் செல்ஃபி க்ளிக் பண்ணிட்டே இருந்த போது.....

#11

#11

செல்ஃபி எடுக்குறத பாத்தாலே சிலருக்கு கடுப்பாகும் போல அம்மணி கார்ல உக்கார்ந்துட்டு ஒரு போஸ் கொடுக்க சம்மந்தமே இல்லாம ரோட்ல போற இன்னொரு கார்ல இருந்து ஒருத்தன் கொடுக்குற போஸ பாருங்க என்னடா இது நம்ம க்ளிக் பண்ணது தானான்னு யோசிச்சே புள்ளைக்கு வயசாகிருச்சு

#12

#12

நைட்டு படம் பார்த்துட்டேயிருந்தோம் அப்டியே செம்ம தூக்கம் அப்டியே சிப்ஸ் சாப்பிட்டுட்டே தூங்கிட்டேன். நான் நல்லா தூங்கினதும் என் மேல சிப்ஸ போட்டு என் பாய்ஃபிரண்ட் போட்டோ எடுத்துட்டான் அப்டின்னு சொல்லத்தான் ஆசை..... ஆனா என்ன பண்ண பின்னாடி அவ்ளோ பெரிய கண்ணாடி இருக்கே....

#13

#13

இதுவும் அதே மாதிரி தான். என் ஆளுக்கு எப்ப பாத்தாலும் போட்டோ எடுக்குறதே வேல

நல்லா தூங்கிட்டு இருந்தேன் திடீர்னு வந்து போட்டோ எடுத்துட்டா... வாவ் பையன் வாழ்றாப்ல ன்னு சொல்வாங்கன்னு பாத்தா எல்லாரும் இந்த பையனயே ஏற இறங்க பாத்து சிரிச்சுட்டு போயிருக்காங்க அப்பறம் போட்டோவ பாத்த போது தான்.

காலுக்கு அண்ட கொடுத்து கஷ்டப்பட்டு க்ளிக் பண்ண வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிருக்கு!

#14

#14

நம்ம க்ரியேட்டிவா எதாவது யோசிச்சு போஸ் கொடுக்கும் போது தான் வந்து இப்டி டிஸ்ட்ரப் பண்ணுவாங்க.... பொண்ணு அமைதியா போட்டோக்கு போஸ் கொடுக்காம ஏடாகூடாம எதாவது சத்தம் போட்ருக்கும் போல பின்னாடி அம்மா கதவு தொறந்துட்டு வந்தது கூட தெரியாம அவ்ளோ சின்சியரு

#15

#15

இதுகளுக்கு வேற வேலையே இல்ல போல ஆபிஸ் போய்ட்டேன்னு சொல்லி வீட்ல நல்லா தூங்கியிருந்தேன், என் கேர்ள் ஃபிரண்ட் என்னைய கையும் களவுமா பிடிச்சுட்டா....அஹான் அப்டியே நம்பிட்டோம்.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

List Of 15 Funny Selfies

List Of 15 Funny Selfies
Desktop Bottom Promotion