Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
May Month Rasi Palan 2026 Lucky Zodiac Signs: 2026 ஆம் ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த மே மாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் மே மாதத்தின் முதல் வாரத்திலேயே புதன் அஸ்தமனமாகியும், செவ்வாய் சொந்த ராசிக்கும் செல்லவுள்ளன. அதைத் தொடர்ந்து சுக்கிரன் மிதுன ராசியில் நுழைவுள்ளார். பின் மாதத்தில் நடுவில் சூரியன் ரிஷப ராசியில் நுழைவார். அதன் பின் புதன் உதயமாகி செல்வாக்கு மிக்கதாக இருக்கும். பின்னர் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இப்போது மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் மங்களகரமானதாக இருக்கும். அதுவும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சாதகமான முடிவுகளை பெறுவார்கள். முக்கியமாக இந்த மாதத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உயர் கல்வியை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடனான உறவு வலுவடையும். வேலை தொடர்பாக பல பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் மே மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் எதிர்பாராத லாபங்களை பெறுவார்கள். மேலும் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இம்மாதத்தில் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மே மாதம் மங்களகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



