Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த சரும பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், வெளியே வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதோடு, சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். இதை தவறாமல் செய்து வந்தாலே, கோடைக்காலத்தில் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்படி சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.

இந்த கோடைக்காலத்தில் கிடைக்கும் சீசன் பழங்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தாலே போதும். அதுவும் கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பல்வேறு வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இந்த பழத்தைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போடும் போது, சருமம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.
மேலும் இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தர்பூசணியை வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்கையும் போட்டு வருங்கள். கீழே ஒருசில தர்பூசணி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த வெள்ளரிக்காய் கூழை எடுத்து, அத்துடன் சிறிது தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.
2. தர்பூசணி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த பேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.
3. தர்பூசணி மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சில துண்டுகள் தர்பூசணியை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, கோடையிலும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
4. தர்பூசணி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் ஏற்றது.
5. தர்பூசணி டோனர்
* தர்பூசணியை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். நீங்கள் இதுவரை கெமிக்கல் டோனரை இதுவரை பயன்படுத்தி வந்தால், கோடையில் தர்பூசணி டோனரைப் பயன்படுத்துங்கள்.
* அதற்கு தர்பூசணியின் ஒரு துண்டை எடுத்து, அதை முகத்தில் நேரடியாக தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இதனால் முகம் பளிச்சென்று இருப்பதோடு, நீரேற்றத்துடனும், பொலிவோடும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


