Latest Updates
-
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்!
அட்சய திருதியை நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Akshaya Tritiya 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையிலும், பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ, நிலைகளின் மூலமோ சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி. மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

முக்கியமாக இந்த ஆண்டின் அட்சய திருதியை ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. இப்படி அட்சய திருதியை நாளில் சுக்கிரன் தனது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகமானது முன்னேற்றம், நிதி ஆதாயம், சுகபோகங்கள் மற்றும் சமூக மரியாதையைக் கொண்டு வரக்கூடியது.
பொதுவாக இந்த ராஜயோகம் உருவாகும் போது, ஜாதகத்தில் கேந்திர (1, 4, 7, 10) மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளின் அதிபதி கிரகங்கள் ஒரு உறவை உருவாக்குகின்றன. இந்த சுப யோகம் வாழ்வில் வெற்றியையும், புகழையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்போது அட்சய திருதியை நாளில் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணக்கூடும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு சிக்கிய பணமும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் முயற்சியைக் கைவிடக்கூடாது. பணியிடத்தில் உங்களை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட வாய்ப்புள்ளது. வேலையில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஆனால் இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் சிறப்பாக முடிவடையும். மன அமைதி கிடைக்கும். நீண்ட காலமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முயற்சித்து வந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
நிதி ரீதியாகவும் சிறப்பான பலனைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


