Latest Updates
-
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்!
Venus Transit In Chithirai Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றுகிறார். இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் சென்று, அங்கு செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். முக்கியமாக பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். காதல் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கியமாக பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். இருப்பினும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஆரோக்கிய விஷயத்தில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்த வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும் அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்டு முடிவு செய்யுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பல சிரமங்களுக்கு உள்ளாகக்கூடும். அதுவும் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப பெறுவது என்பது கடினமாக இருக்கும். காதல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரம் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
மீனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு பெரிய சவால்களை கொண்டு வரும். மன அழுத்தம் அதிகரிக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பெரிய மற்றும் முக்கியமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகரிப்பதால் பண சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளும், தவறான புரிதல்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


