Latest Updates
-
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!'
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
Budhaditya Rajyog 2026 In Aries: ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் மற்றும் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த சூரியன் தன்னம்பிக்கை, சக்தி, கௌரவம் ஆகியவற்றின் காரணியாவார்.

இந்நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியுமான புதன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி புதன் மேஷ ராசியில் நுழைவதால், அந்த ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது அறிவு, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக வெற்றியைக் குறிக்கிறது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். சுமார் 1 ஆண்டு கழித்து உருவாகும் இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


