Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
Vastu Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் பலரது வீடுகளில் மண் பானைகளின் பயன்பாடு அதிகரித்திருக்கும். என்ன தான் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருந்தாலும், மண் பானை நீரைப் போன்று வராது. மேலும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் நீரை விட, மண்பானை நீர் தனித்துவமான சுவையில் இருப்பதோடு, சத்தானதும் கூட.
இப்படிப்பட்ட மண் பானையை வீட்டில் சரியான இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் இந்த மண் பானை தண்ணீரைக் குளிர்விக்க உதவுவது மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்தின்படி, அது உங்கள் உறங்கிக்கிடக்கும் செல்வத்தையும் தட்டி எழுப்பும் ஆற்றல் கொண்டது என்பது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளும், பஞ்ச பூதங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் இந்த மண்பானையில் உள்ள களிமண் பூமி பூதத்தின் சின்னமாகவும், நீர் நீர் பூதத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டும் ஒரு வீட்டில் சரியான திசையில் இருந்தால் தான் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாயும். இப்போது வாஸ்துப்படி மண்பானையை வீட்டில் எந்த இடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பது குறித்து காண்போம்.
மண் பானையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மண் பானையை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதே சிறந்தது. ஏனெனில் வடக்கு திசையானது நீரின் திசை மற்றும் செல்வத்தின் தெய்வமான குபேரரின் திசை. இந்த திசையில் நீரை வைக்கும் போது, அது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதுடன், நிதிச் சிக்கல்களையும் நீக்குகிறது. ஒருவேளை வடக்கு திசையில் இடம் இல்லாவிட்டால், வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
நீங்கள் பண பிரச்சனை அல்லது கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் வீட்டில் வைத்திருக்கும் மண் பானையை ஒருபோதும் காலியாக வைத்திருக்காதீர்கள். எப்போதும் பானையில் நீர் நிரம்பியிருக்குமாறு செய்யுங்கள். இப்படி நீர் முழுமையாக நிரம்பிய பானை வீட்டில் செல்வத்தை நிரப்பி வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
மண் பானையில் இருந்து நீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஜாதகத்தில் சந்திரனின் நிலையை பலப்படுத்துகிறது. ஏனெனில் சந்திரன் மனதை குறிக்கிறது. எனவே மண் பானையில் இருந்து நீரை குடிக்கும் போது, அது மன அழுத்தத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாஸ்துப்படி, மண் பானைக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பது வருண பகவானை மகிழ்வித்து, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கிறது.
வீட்டில் மண் பானையை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
* மண் பானையை எப்போதும் தெற்கு திசையில் வைக்காதீர்கள். ஏனென்றால் அது நெருப்பின் திசை. இந்த திசையில் நீரை வைத்தால், அது வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
* மண் பானையில் எந்த விரிசலும் இருக்கக்கூடாது. ஏனெனில் விரிசல் உள்ள பானை வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும்.
* மண் பானையில் உள்ள நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, தேங்கிய அல்லது அசுத்தமான தண்ணீர் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை.
எனவே உங்கள் வீட்டில் மண் பானை வாங்கி வைத்து நீரை குடிக்க நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications