Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க
Vastu Tips in Tamil: வாஸ்து சாஸ்திரம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வத்தை ஈர்ப்பதற்கு, ஒருவர் பிரபஞ்ச ஆற்றலுடன் சீராகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும். ஒருவர் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படைத் தேவையென்றால் அது பணம்தான். வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி, பஞ்சபூதங்களான நெருப்பு, நீர், நிலம், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பிரபஞ்ச ஆற்றலைப் பிரதிபலிக்கின்றன.

வாஸ்து என்பது நல்லிணக்கம் மற்றும் சமநிலைக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பண்டைய இந்தியக் கட்டிடக்கலைக் கோட்பாடாகும். உங்கள் வீட்டை வாஸ்து முறைப்படி அமைப்பதன் மூலமே நீங்கள் செழிப்பு, செல்வம், பணம், வெற்றி மற்றும் நல்வாழ்வை ஈர்க்க முடியும். உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வாஸ்து சாஸ்திரம் முக்கிய குறிப்புகள் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குபேர யந்திரம்
குபேரர் செல்வத்தையும் செழிப்பையும் குறிப்பவர். மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை ஆட்சி செய்கிறார். எனவே, உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில்தான் நீங்கள் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும். நீங்கள் செல்வத்தை ஈர்க்க விரும்பினால் அதற்கு கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகளில் ஒன்று, உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் எதிர்மறை ஆற்றலைச் சேமித்து வைக்கும் அனைத்துப் பொருட்களையும் அகற்ற வேண்டும்.
லாக்கரை தென்மேற்கு மூலையில் வைக்கவும்
நீங்கள் கோடீஸ்வரராக விரும்பினால், உங்கள் லாக்கர்கள் அல்லது பாதுகாப்புப் பெட்டகங்களை உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் வையுங்கள். இந்த இடமானது 'நிலம்' எனும் பஞ்சபூதத்தைக் குறிக்கிறது. இது வீட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. மேலும், உங்கள் வீட்டில் உள்ள லாக்கர் ஒருபோதும் மேற்கு அல்லது தெற்கு திசைகளை நோக்கித் திறக்கும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. ஏனெனில் இது கடுமையான நஷ்டத்தையும், பண இழப்பையும் ஏற்படுத்தும்.
வடகிழக்கு திசையில் மீன்தொட்டிகளை வைக்க வேண்டும்
உங்கள் வீட்டில் நீரூற்றுகள் அல்லது மீன் தொட்டிகள் போன்ற நீர் கூறுக்கு இடமளிப்பது, வீட்டில் செல்வம் பெருக உதவும் முக்கியமான வாஸ்து குறிப்புகளில் ஒன்றாகும். பண வரவை அதிகரிக்க, இந்த பொருட்களை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். நீரில் உள்ள தூய்மையும், அதன் சீரான ஓட்டமும் செல்வத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான காரணிகளாகும்.
நீர் கசிவிருந்தால் உடனடியாக சரி செய்யவும்
குளியலறை, சமையலறை அல்லது பிற பகுதிகளிலிருந்து ஏற்படும் நீர் கசிவுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சிறிய அளவிலான நீர் கசிவாக இருந்தாலும், அதைப் புறக்கணிப்பது பெரும் நிதி இழப்புகளுக்கும் பண விரயத்திற்கும் வழிவகுக்கும்.
குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் வடகிழக்கு அல்லது வடமேற்கு மட்டுமே இருக்க வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் உள்ள கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் எப்போதும் வடகிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில் அமைய வேண்டும். இந்த வாஸ்து கோட்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம், நிதி நிலைத்தன்மையையும், அத்துடன் பொருளாதார ஆதாயங்களையும் பெற முடியும்.
வடக்கு திசையில் கவனம் செலுத்த வேண்டும்
உங்கள் வீட்டின் வடக்கு திசைக்கு நீல நிறம் பூசுவது, உங்கள் நிதி நிலையை பெருக்க உதவும் மிகவும் பயனுள்ள வாஸ்து குறிப்புகளில் ஒன்றாகும். வீட்டின் இந்த திசையை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மேலும் இந்த திசையில் சலவை இயந்திரங்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் மிக்சி-கிரைண்டர் போன்ற பொருட்களை வைக்கக்கூடாது. செல்வம் பெருக இந்த வாஸ்து குறிப்பை ஒருபோதும் பின்பற்றக்கூடாது.
சமையலறை
உங்கள் வீட்டின் சமையலறை தென்கிழக்கு மூலையிலோ அல்லது தென்கிழக்கு மூலைக்குத் தெற்கிலோ அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக சமையலறை ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்க வேண்டும். சமையலறையானது நெருப்புத் மூலக்கூறின் குறியீடாக விளங்குவதால், அங்குள்ள பொருட்களைத் தென்கிழக்கு திசையை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் செடிகளை வளர்த்தல்
வீட்டில் செடிகளை வளர்ப்பது, வீட்டை அழகாக்குவதற்கு ஒரு சிறந்த வழியாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு வகைச் செடியும் தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட சில செடிகள், வீட்டிற்குப் பணத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மணி பிளான்ட், மூங்கில் செடி மற்றும் ரப்பர் செடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இருப்பினும், இந்தச் செடிகளை வீட்டின் உள்ளே வைக்கும்போது, அவை வைக்கப்படும் இடம் மற்றும் திசை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.



Click it and Unblock the Notifications
