Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
Jupiter Nakshatra Transit On 20 April 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, கல்வி, குழந்தைகள் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியும் கூட. மேலும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு 4 மாதத்திற்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியின் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான் பயணித்து வருவது சற்று சிறப்பானது.

இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். அதுவும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும் மற்றும் பலவிதமான நன்மைகளையும் பெறக்கூடும். இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதியான குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மந்தமாக இருந்த வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறைந்து, உடல்நலம் மேம்படும். குடும்ப பிரச்சனைகளும் தீரும். தொழிலில் சந்தித்து வந்த தடைகள் அகலும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கான பண உதவி கிடைக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்களின் சதிகளை முறியடிப்பீர்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். தொழில் அல்லது வேலையில் ஒரு புதிய மாற்றங்களைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் மற்றும் மந்த நிலை தீர்ந்து, தொழில் சிறக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். மன அமைதி மேம்படும். வேலையில் உங்களின் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மனதளவில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் கஷ்டங்கள் தீரும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக வலுவடைவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செல்வம் குவியும். முக்கியமாக வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். திடீர் பண வரவால் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தின் நிதி நிலை அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

