Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Health Benefits of Sambar: தமிழர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சாம்பர்தான். இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளாக இருந்தாலும் சரி, மதிய உணவின் சாதத்திற்காகவும் இருந்தாலும் சரி சாம்பார்தான் அதற்கு பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். அதனால்தான் தமிழர்களையும், சாம்பாரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

சாம்பார் என்பது பருப்பு வகைகள் மற்றும் காய்கறிளை வைத்து செய்யப்படும் ஒரு தென்னிந்திய சைவக் குழம்பு ஆகும். சாம்பார் ஒரு எளிமையான மற்றும் சுவயான உணவு என்பதையும் தாண்டி, இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. புளிப்பு, காரம் மற்றும் இதமளிக்கும் சாம்பாரின் புத்துணர்ச்சியூட்டும் சுவை உலகம் முழுவதும் பிரபலமானதாகும். உங்களுக்கும் சாம்பார் பிடிக்குமென்றால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
புரோட்டின் நிறைந்தது
சாம்பாரின் முதன்மையான பொருளே பருப்புதான். பொதுவாக சாம்பார் பல பருப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருப்பு வகைகள் சைவப் புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். சைவ உணவு உண்பவர்கள் அவர்களின் புரோட்டின் தேவையை நிறைவு செய்வதற்கு சாம்பாரை உட்கொள்ளலாம். முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றை அவர்கள் சாப்பிட முடியாத நிலையில், சாம்பார் ஒரு பயனுள்ள மற்றும் சுவையான புரத ஆதாரமாக அவர்களுக்கு இருக்கும். புரதங்களே உடலின் அடிப்படைக் கட்டுமானக் கூறுகளாகும். இவை தசை வளர்ச்சிக்கும், சேதமடைந்த தசைகளை சரி செய்வதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் அவசியமானவையாகும்.
நார்ச்சத்து நிறைந்தது
சாம்பாரில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள், புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்து மிகுந்தவையாகவும் திகழ்கின்றன. சாம்பாரில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான காய்கறிகள், நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகளாக உள்ளன. பாரம்பரியமாக சாம்பாரில் முருங்கைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி மற்றும் நார்ச்சத்து மிகுந்த பிற பருவகாலக் காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. உணவிலுள்ள நார்ச்சத்துகள் செரிமானவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இவை வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையை அதிகரிக்கும் பிற உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பதைத் தடுக்கின்றன.
ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தது
பருப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த குழம்பானது, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, துத்தநாகம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்ததாகும். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து, இதில் இடம்பெறும் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்களின் கலவையும் சாம்பாரின் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கின்றன. புளிக்கரைசல், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் கடுகு ஆகிய பொருட்கள், செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உடல் எடையைக் குறைப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
எளிதில் செரிமானமாகக் கூடியது
நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சீரான செரிமானத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக சாம்பார் திகழ்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது அதேசமயம், சாம்பாரில் மிகுந்துள்ள நீர்ச்சத்தானது, குடல் சுவர்களின் வழியாக மலம் எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது.
எடைக்குறைப்பிற்கு உதவுகிறது
சாம்பார் புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதோடு, எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சுவையான மற்றும் பொருத்தமான உணவாக அமைகிறது. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பெற, இதில் சேர்க்கப்படும் காய்கறிகளின் அளவை அதிகரிக்கவும், உப்பின் அளவைக் குறைக்கவும் செய்யலாம். ஏனெனில், அதிகப்படியான சோடியம் உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
நச்சுக்களை வெளியேற்றுகிறது
சாம்பாரை அடிக்கடி உட்கொள்வது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதில் சேர்க்கப்படும் பருவகால காய்கறிகள், புரதம் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் நச்சு நீக்கத்திற்கு உகந்த மசாலாப் பொருட்களின் கலவை ஆகியவை இதில் அடங்கும். உப்பின் அளவைக் குறைவாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மசாலாப் பொருட்களின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

