Latest Updates
-
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? -
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்ற ராசிகளை விட அதிக காம உணர்வு கொண்டவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க.. -
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளி சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Benefits of Tomato Chutney: காலம் காலமாக தென்னிந்தியாவில் காலை உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு பிரதானமான சைடிஷ் என்றால் எப்போதும் முதலிடத்தில் இருப்பது தேங்காய் சட்னிதான். அதற்கு அடுத்த இருப்பதில் தக்காளி சட்னிதான். அழகான தக்காளிகளையும், பிற பொருட்களையும் சேர்த்து ப்ரெஷாக அரைக்கப்படும் காரசாரமான தக்காளி சட்னி இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.
தக்காளி சட்னி சுவையானதாக இருந்தாலும் அதனால் சில ஆபத்துகள் ஏற்படும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக தக்காளி சிறுநீரகத்தை பாதிக்கும் எனவும், தக்காளியை தொடர்ந்து உட்கொண்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் தக்காளி சட்னி பல அற்புதமான நன்மைகளை அளிக்கக்கூடிய அற்புதமான உணவாகும்.

தக்காளியின் சாறு, கடுகு விதைகளின் லேசான நறுமணம், மற்றும் பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவவை சேர்ந்த புளிப்பு மற்றும் காரமான சுவை கொண்ட இந்த சட்னி யாராலும் மறுக்க முடியாத ஒரு சைடிஷாகும். இந்த பதிவில் தக்காளி சட்னி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
புற்றுநோயைத் தடுக்கும்
தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் குளுடாதையோன் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஏ]=மேம்படுத்த உதவுகிறது. இந்த சட்னியை அடிக்கடி சாப்பிடுவது, புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். மேலும், தக்காளியில் உள்ள லைக்கோபீன், உடலில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போரிடும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.
கலோரிகள் குறைவாக உள்ளது
தக்காளி கலோரி மிகவும் குறைவாக உள்ள பொருளாகும். தக்காளி சட்னியில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், அதைச் சாப்பிட்டால் சுமார் 31 கலோரிகள் மட்டுமே சேரும். தக்காளி சட்னியுடன் உங்கள் உணவைச் சாப்பிடுவது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். நீங்கள் குறைந்த கலோரி டயட்டில் இருந்தால், தக்காளி சட்னி சாப்பிடுவது உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.
செரிமானத்திற்கு நல்லது
தக்காளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. இந்த தக்காளி சட்னியைச் சாப்பிடுவது, உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவும், மேலும் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும்.
இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது
உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் பிரச்சினையாகும். உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இந்தத் தக்காளிச் சட்னியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், தக்காளியில் சோடியத்தின் அளவு குறைவாகவும், பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் உள்ளது; இது உயர் இரத்த அழுத்த அளவுகளைக் கொண்டவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும்.
சிறுநீர் பாதை தொற்றைத் தடுக்கிறது
சிறுநீர்ப் பாதை தொற்று என்பது பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, எனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு இப்பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கும். எனவே, உங்கள் அன்றாட உணவில் தக்காளிச் சட்னியைச் சேர்த்துக்கொள்வது, இந்த தொற்றைத் தடுப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
கண் ஆரோக்கியம்
தக்காளியில் லுடீன், பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் A ஆகியவை நிறைந்துள்ளன; இவை பார்வையைப் பாதுகாக்கவும், கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், வயது தொடர்பான விழித்திரைச் சிதைவைத் தடுக்கவும் உதவுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
