Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உலகின் டாப் 10 பழமையான நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
உலகின் பழமையான நாடுகள் எதுவென்று வரும்போது ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமான கருத்தைக் கொண்டிருப்பார்கள். உலகின் மிகவும் பழமையான நாடுகள் எதுவென்று தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானதாகும். மொத்தம் 195 நாடுகள் இருக்கும் நம் உலகத்தில் சில நாடுகள் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒரு முழுமையான நாடுகளாக தனித்து நிற்கிறது.
இந்த நாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருந்து, கலாச்சாரம், அறிவியல் மற்றும் சமூகத்தை பல வழிகளில் வடிவமைத்துள்ளன. இந்த நாடுகளின் வரலாறும், கட்டமைப்புகளும் மற்றும் கலாச்சாரமும் இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வாழும் முறையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. 'World of Statistics' இணையதளத்தின் ஆய்வின் படி, பல நாடுகள் அவற்றின் தொன்மையான தோற்றங்களுக்காகத் தனித்து நிற்கின்றன. இந்த நாடுகள் எப்போது தோன்றின என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவை எவ்வளவு பழமையானவை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஈரான்
5226 ஆண்டுகள் பழமையான 'பாரசீகம்' என்று அறியப்படும் ஈரான், உலகின் மிகவும் பழமையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிரம்மாண்டமான கட்டிடக்கலை, கணிதம் மற்றும் வானியல் துறையில் சாதனைகள், மற்றும் உலகின் முதல் நிர்வாக அமைப்புகள் கொண்ட அரசாங்கங்களில் ஒன்றை உருவாக்கியவை போன்றவை ஈரானின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தில் அடங்கும். அகாமேனிய மற்றும் சசானியப் பேரரசுகள் வாயிலாக ஈரானின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியது.
எகிப்து
எகிப்து 5,126 ஆண்டுகள் பழமையானது. பண்டைய எகிப்து பார்வோன்கள், பிரம்மாண்டமான பிரமிடுகள், கோயில்கள் மற்றும் சித்திர எழுத்துக்களுக்காகப் புகழ்பெற்றது. நைல் நதிக்கரையில் தோன்றிய மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக, எகிப்து விவசாயம், கணிதம் மற்றும் மருத்துவத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை உருவாக்கியது. எகிப்திய நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அனைத்து நாடுகளிலும் பிரதிபலித்தது.
வியட்நாம்
4,905 ஆண்டுகள் பழமையான வியட்நாம், ஆரம்ப கால பேரரசுகள் மற்றும் செந்நதி நாகரிகத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. வியட்நாம் மரபுகளில் கன்பூசிய தத்துவம், செழுமையான இலக்கியம், தனித்துவமான கலை வடிவங்கள், பாரம்பரிய இசை, நாட்டுப்புற விழாக்கள் மற்றும் மத நடைமுறைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நவீன வியட்நாமிய சமூகம், தேசிய அடையாளம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகின்றன.
ஆர்மீனியா
4,518 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆர்மீனியா, கிறிஸ்தவத்தைத் தழுவிய முதல் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கி.பி. 301-ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது. இந்த நாட்டின் வரலாறு பண்டைய இராஜ்ஜியங்கள், மடாலயங்கள் மற்றும் கலை, இசை, இலக்கியம், கட்டிடக்கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றில் அமைந்த செழுமையான மரபுகளால் நிறைந்துள்ளது. 5-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆர்மீனிய எழுத்துமுறை இன்றும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா
வட கொரியாவின் வரலாறு 4,359 ஆண்டுகளுக்கு முந்தைய டங்குனால் நிறுவப்பட்ட கோஜோசியோன் இராஜ்ஜியத்தில் இருந்து தொடங்குகின்றன. ஆரம்பகால கொரிய சமூகங்கள், கன்பூசியக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறைகள், உலோக வேலைப்பாடுகள் மற்றும் கல்விக்காக அறியப்பட்டன. இந்த மரபுகள் கொரியாவின் கலாச்சார, தொழில்நுட்ப மற்றும் தத்துவ சாதனைகளுக்கு அடித்தளமிட்டன.
சீனா
4,096 ஆண்டுகள் பழமையான சீனா, மிகப் பழமையான தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்றாகும். சியா வம்சத்தில் தொடங்கி, உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்று சீனாவில் அமைந்துள்ளது. காகிதம் தயாரித்தல், திசைகாட்டி, வெடிமருந்து மற்றும் அச்சுக்கலை போன்ற புதுமைகளை அது அறிமுகப்படுத்தியது. சீனத் தத்துவம், இலக்கியம் மற்றும் ஆட்சிமுறை ஆகியவை கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இன்று உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக சீனா உருவெடுத்துள்ளது.
இந்தியா
இந்தியா 4,026 ஆண்டுகள் பழமையானது, அதன் வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்குகின்றன. இந்தியா ஒருங்கிணைக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவது மற்றும் வர்த்தகத்தில் ஆரம்பகாலத்திலிருந்தே ஒரு முக்கியப் பங்காற்றியது. இந்தியா இந்து மதம், பௌத்தம் மற்றும் சமண மதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை வளர்த்தெடுத்தது. கணிதம், அறிவியல், வானியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் அதன் பங்களிப்புகள் உலகளவில் செல்வாக்கு மிக்கவையாகத் திகழ்கின்றன. அதே நேரத்தில், மருத்துவம், கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் கலை ஆகியவற்றில் அதன் முன்னேற்றம் மற்ற நாடுகளை விட முன்னேறியதாக இருந்தது.
ஜார்ஜியா
3,326 ஆண்டுகள் பழமையானக் கருதப்படும் காகசஸ் பகுதியில் அமைந்துள்ள ஜார்ஜியா, கோல்கிஸ் மற்றும் ஐபீரியா போன்ற ஆரம்பகால ராஜ்ஜியங்களின் தாயகமாக விளங்கியது. அதன் தனித்துவமான திராட்சை மது தயாரிக்கும் பாரம்பரியம், பழங்காலக் கோட்டைகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்காக அறியப்பட்ட ஜார்ஜியா, ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான ஒரு சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன், வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திலும் செல்வாக்கு செலுத்தியது.
எத்தியோப்பியா
3,006 ஆண்டுகள் பழமை வாய்ந்த எத்தியோப்பியா, ஆப்பிரிக்க கண்டத்தின் மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இது பழங்கால இராஜ்ஜியங்களில் தனது வேர்களைக் கொண்டுள்ளதுடன், பொதுவாக ஆதிகால மனித வரலாற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
கிரீஸ்
2,826 ஆண்டுகால பழமையான வரலாற்றைக் கொண்ட கிரீஸ், இன்றும் நிலைத்திருக்கும் மக்களாட்சி, தத்துவம் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போன்ற உலக வரலாற்றின் முக்கிய விஷயங்களை வடிவமைத்ததற்காக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications

