Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Andhra style Cucumber Pappu Recipe in Tamil: வெயில் காலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் வெள்ளரிக்காயும் ஒன்றாகும். இதுவரை நீங்கள் வெள்ளரிக்காயை அப்படியே மட்டும் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்ன வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடலாமா என்று பலரும் கேட்கலாம். ஆம், உண்மையிலேயே வெள்ளரிக்காயை சமைத்து பல சுவையான உணவுகளை சாப்பிடலாம். அப்படி ஒரு ஸ்பெஷல் ஐட்டம்தான் ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு.

இந்த ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு செய்தால், இது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்புவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா வெள்ளரிக்காய் பப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
- வெள்ளரிக்காய் - 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 இன்ச்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- நசுக்கிய பூண்டு - 10 பல்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- வெள்ளரிக்காயைக் கழுவி, தோலை நீக்கவும். பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அதேபோல வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து தனியாக புளிச்சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், பருப்பு வகைகள், நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
- குறைந்த தீயில் 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- பின்னர் குக்கரைத் திறந்து, பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- பின்னர் புளிச்சாறை சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும்.
- ஒரு கடாயில்நெய்யை ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, சீரகம் மற்றும் வர மிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நசுக்கிய பூண்டு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
- பின்னர் இதில் பெருங்காயத்தை சேர்த்து தாளித்து குக்கரின் மீது கொட்டவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெடி!



Click it and Unblock the Notifications
