பில்லி சூனிய பொம்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் இதுவரை பில்லி சூனிய மாந்திரீகத்தைப் பற்றி திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். இது ஒருவருக்கு கேடு விளைவிக்க செய்யும் தீய செயலாகும். இது மிகவும் பயங்கரமாக இருக்கும். என்ன தான் இது ஒரு மூடநம்பிக்கையாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இதன் மேல் ஒரு நம்பிக்கை உண்டு.

Shocking Things About Voodoo Witchcraft That You Should Know

பில்லி சூனியம் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு மதம். பேகன் காலம் வரை இந்த மதம் இருந்தது. நாளடைவில், அது மாற்றமடைந்து, தற்போது இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மாந்திரீகத்தை கற்றுக் கொண்டு, ஒருவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்படுகிறார்கள்.

பில்லி சூனியம் மாந்திரீகத்தில் பொம்மைகள் மூலம் எதிரிகளை பழி வாங்குவது தான் வழக்கம். இக்கட்டுரையில் பில்லி சூனிய பொம்மைகள் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷயம் #1

விஷயம் #1

பில்லி சூனிய மாந்திரீகத்தில் பொம்மைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக நம்பப்படுகிறது. இந்த பொம்மையைக் கொண்டு எதிரிகளை அழிப்பார்களாம்.

விஷயம் #2

விஷயம் #2

பில்லி சூனிய பொம்மைகளானது யாரைக் குறி வைக்கிறோமோ, அவர்களது நகம், தலைமுடி, உடுத்திய துணி அல்லது இரத்தம் கொண்டு மாந்திரீகவாதிகள் செய்வார்களாம். இதனால் எதிரியின் ஆத்மா எளிதில் கட்டுப்படுத்தப்பட்டு, நாம் நினைப்பதை செய்ய முடியுமாம்.

விஷயம் #3

விஷயம் #3

பில்லி சூனிய சடங்கு ஆரம்பித்த பின், பொம்மைக்கு உயிருள்ள ஒரு விலங்கின் இதயத்தை எடுத்து பொம்மையினுள் வைக்கப்படும். இப்படி செய்வதால், பொம்மை உயிர் பெற்று, பின் அது எதிரியின் ஆத்மாவுடன் இணைக்கப்பட்டு, எதிரியை துன்புறுத்த உதவுமாம்.

விஷயம் #4

விஷயம் #4

பொம்மை எதிரியின் ஆத்மாவுடன் இணைந்த பின், 1/2 இன்ச் நீளமுள்ள ஊசியை, பொம்மையின் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் துளையிடுவார்களாம்.

விஷயம் #5

விஷயம் #5

பில்லி சூனியத்தால் குறி வைக்கப்பட்ட எதிரி, எவ்வளவு மைல் தொலைவில் இருந்தாலும், 28 நாட்களுக்குள் அழிவை சந்திப்பார்களாம்.

விஷயம் #6

விஷயம் #6

பில்லி சூனிய பொம்மைகள் ஒருவரை அழிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுமாம்.

விஷயம் #7

விஷயம் #7

உலகிலேயே ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் இந்த பில்லி சூனியம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Things About Voodoo Witchcraft That You Should Know

Here are some things you must know about the voodoo religion and voodoo witchcraft. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter