Latest Updates
-
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த 4 ராசிக்காரங்க அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பார்களாம் -
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, உடல் எடை இருமடங்கு வேக வேகத்தில் குறையும்.. -
இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும் -
கேது நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
5 முக்கிய தொகுதிகளை கொண்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம் இதாங்க! -
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க
Kollu Benefits: அடிக்கடி கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Kollu Benefits: பழங்காலத்தில் நம் முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்த உணவுகளுள் கொள்ளு பருப்பும் ஒன்று. இந்த கொள்ளு பருப்பானது தென்னிந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படும் புரதச்சத்து நிறைந்த ஒரு பயறு வகையாகும். கொள்ளு பருப்பில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், கொள்ளு பருப்பை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
பொதுவாக கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை அனைவரும் அறிவோம். இது தவிர இந்த பருப்பை உட்கொள்வதனால் வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் என்பது தெரியுமா? உங்களுக்கு கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. எடை இழப்பு
கொள்ளு பருப்பில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவி புரிந்து, உடல் எடை குறைய உதவுகிறது. மேலும் இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதால், கண்ட உணவுகளின் மீதான நாட்டமும் குறையும். . அதோடு, இது செரிமானத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதற்கு கொள்ளுவை சூப்பாகவோ, ரசமாகவோ அல்லது துவையலாகவோ செய்து எடுத்துக் கொள்ளலாம்.
2. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொள்ளு பருப்பில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரும்புச்சத்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளின் அபாயத்தை எதிர்த்து போராட உதவுகிற்ன. எனவே சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொள்ளு ரசம் அல்லது கொள்ளு சூப் குடியுங்கள்.
3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
கொள்ளு பருப்பு குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸை கொண்டது. அதாவது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடுவதை மெதுவாக்குவதால், இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிப்பது கட்டுப்படும். எனவே கொள்ளு பருப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவுப் பொருள்.
4. செரிமானம் மேம்படும்
கொள்ளு பருப்பு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது குடலியக்கத்தின் செயல்பாட்டை சீராகி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
5. இதய ஆரோக்கியம் மேம்படும்
கொள்ளு பருப்பில் பாலிஃபீனால்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படும்.
6. சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்
சித்த மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு கொள்ளு பருப்பு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது சிறுநீர்ப்பெருக்கியாகச் செயல்பட்டு, சிறுநீர்ப் பாதையிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. எனவே சிறுநீரக கற்கள் வரக்கூடாதெனில், கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
7. கல்லீரலை சுத்தப்படுத்தும்
கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை திறம்பட வெளியெற்ற கொள்ளு பெரிதும் உதவி புரிகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுப்பதுடன், கல்லீரல் பழுதுபார்த்தல் மற்றும் மீளுருவாக்கத்திற்கும் துணைபுரிகின்றன. அதற்கு கொள்ளுவை சூப்பாகவோ, ரசமாகவோ வைத்து சாப்பிடலாம்.
8. எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
கொள்ளு பருப்பில் கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் இருப்பதால், இது எலும்புகளை வலுவாக்குவதோடு, வாதம், மூட்டு வலி, எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் கொள்ளு பருப்பை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
கொள்ளு பருப்பை எப்படி உணவில் சேர்க்கலாம்?
கொள்ளு பருப்பை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். அதுவும் கொள்ளு ரசம், கொள்ளு பொடி, கொள்ளு சட்னி, கொள்ளு சூப், கொள்ளு துவையல், கொள்ளு கடையல், கொள்ளு கஞ்சி என்று பல சுவையான வழிகளில் உட்கொள்ளலாம். இப்போது அதில் ஒன்றான கொள்ளு துவையலை எப்படி செய்வதென்று ஹேமா சுப்ரமணியன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது எப்படி என்பதை பார்ப்போம்.
கொள்ளு துவையல் தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* பூண்டு - 7 பெரிய பல்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு மிதமான தீயில் வைத்து, நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 மூடி துருவிய தேங்காயை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு பருப்பை சேர்த்து, அத்துடன் வறுத்த மற்ற பொருட்களையும் சேர்த்து, நீர் சேர்க்காமல் முதலில் அரைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்து கலந்தால், கொள்ளு துவையல் தயார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













