Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிங்க.. கொழுப்பு கரைந்து உடல் எடை மடமடன்னு வேகமாக குறையும்...
Weight Loss Kollu Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் பருமனால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உடல் எடையைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியுடன், டயட்டிலும் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் காலை வேளையில் பெரும்பாலும் ருசியில்லாத உணவுகள் தான் இடம் பெற்றிருக்குமா? உங்கள் டயட்டில் ருசியான உணவுகளை சேர்க்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுவும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தசைகளை வலுவாக்கும் கொள்ளு கொண்டு கஞ்சி தயாரித்து, வாரத்திற்கு 3 முறை குடித்து வரும் போது, உடல் எடை வேகமாக குறையும். முக்கியமாக இந்த கஞ்சி ருசியாகவும் இருக்கும். இந்த கஞ்சிக்கு பருப்பு துவையல், சின்ன வெங்காயம் போன்றவை சிறந்த சைடு டிஷ்களாக இருக்கும்.

உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/2 கப்
* புழுங்கல் அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 7 கப்
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் கொள்ளு
விதைகளை சேர்த்து லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் வறுத்த கொள்ளு விதைகளை மிக்சர் ஜாரில் போட்டு, ஒன்றிரண்டாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் 1/2 கப் அரிசியை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரைத்த கொள்ளு விதைகளை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 7 கப் நீரை ஊற்றி, பூண்டு பற்களை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு மசித்து கிளறி
விட வேண்டும்.
* கஞ்சி கெட்டியாக இருந்தால், அதில் நன்கு கொதிக்க வைத்த சூடான நீரை
ஊற்றி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் 1/2 கப் தயிரை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான
கொள்ளு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
