Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடல் கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு ரசம் - எளிய முறையில் செய்வது எப்படி?
Kollu Rasam Recipe: நீங்கள் தினமும் மதியம் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ரசம் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கொள்ளு ரசம் செய்யுங்கள். இந்த கொள்ளு ரசம் சளி, இருமலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம். அதுவும் கொள்ளு ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அதை சூப்பாகவும் குடிக்கலாம். முக்கியமாக கொள்ளு ரசத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உங்களுக்கு கொள்ளு ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1 கப்
* நீர் - 1 1/2 கப்
* புளி - 1/2 எலுமிச்சை அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3-4 பல்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* வேக வைத்த கொள்ளு - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
பிற பொருட்கள்..
* வெல்லம் - சிறிது
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கொள்ளு பருப்பை நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி,
குக்கரில் போட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை
மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு கொள்ளு வேக வைத்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், பூண்டு
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் வேக வைத்த கொள்ளு சேர்த்து கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு,
சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புளிச்சாற்றினை
ஊற்றி, அரைத்த மசாலாவையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கொள்ளு நீரை ஊற்றி, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக வெல்லம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
கொள்ளு ரசம் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications