Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு சட்னி... எப்படி செய்றது-ன்னு பாருங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்...
Kollu Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு ஒவ்வொரு நாளும் சட்னியை யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால், அந்த கொள்ளு கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் வலுவாகும். குறிப்பாக நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், இந்த கொள்ளு சட்னியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கொள்ளு - 100 கிராம்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1 கையளவு (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும் கொள்ளு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு, புளி, தேங்காய், சீரகம் சேர்த்து
நன்கு நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து முதலில் நீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து, ஒரு கொதி
விட்டு இறக்கினால், சுவையான கொள்ளு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
