Latest Updates
-
சனிபகவான் திரிகிரக யோகத்தின் போது நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் -
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது -
வரதட்சணை கொடுமை: திருமணமான 7 ஆண்டுகளில் நடக்கும் மரணங்கள்! உங்கள் மகளைக் காக்க இந்த சட்டங்கள் தெரியுமா? -
இந்தியா-லண்டன் வரை 11 நாடுகள் வழியாக சென்ற உலகின் நீண்ட பயணத்தின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா? -
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? புதிய சட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ! -
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும் -
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அமிர்தமா இருக்கும் -
வெயில் கொடுமையா? வீட்டை ஜில்லுனு வச்சுக்க இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், பணமும் தேடி வரும்! -
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண் பிற பெண்கள் மீது ஆசை கொள்வதற்கு இந்த 5 விஷயங்களில் ஒன்றுதான் காரணமாம்
5 முக்கிய தொகுதிகளை கொண்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம் இதாங்க!
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்ததோடு, அனல்பறக்க தேர்தல் வாக்குறுதிகளுடன் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. மேலும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொத்து விவரங்களையும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு விவரங்களின்படி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன. அந்த 5 தொகுதிகளாவன அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், திருநெல்வேலி ஆகியவை.

இந்த திருநெல்வேலியின் பெயரை சொன்னதுமே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அல்வா தான். அதுவும் இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் புகழ்பெற்றது. இந்த அல்வாவின் சுவைக்கு இணையாக வேறு எந்த அல்வாவும் வராது. அந்த அளவில் இருட்டுக்கடை அல்வா வாயில் வைத்ததும் கரையும்படி அருமையாக இருக்கும்.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் தோற்றம்
தலைமுறை தலைமுறையாக, 'இருட்டுக்கடை அல்வா' என்பது வெறும் ஒரு இனிப்புப் பண்டமாக மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட "இருட்டுக்கடை அல்வா குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்க்காரணம் சொல்கிறார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர்க்காரணம் என்ன என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்" என்று இருட்டுக்கடையின் நிர்வாக இயக்குனர் திருமதி கவிதா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் அவர் கூறியதாவது, "1900-ல் எங்கள் கிருஷ்ண சிங் தாத்தாவால் உருவாக்கப்பட்டது தான் இந்த இருட்டுக்கடை. இந்த இருட்டுக்கடை அல்வாவைப் பொறுத்தவரை, எங்கள் தாத்தாவே தான் அதை செய்வார். எங்கள் தாத்தாவே அதை காலை நேரத்தில் வீட்டில் செய்து, மாலை நேரத்தில் வியாபாரத்திற்காக அதை விற்க கடைக்கு கொண்டு வருவார்.
அந்த காலத்தில் ஒரு குண்டு பல்பு மட்டும் தான் எங்கள் கடையில் இருக்கும். பெயர் பலகை எதுவுமே கிடையாது. சாயங்காலம் எல்லாரும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, அவங்க வீட்டில் இருப்பவர்கள் 'இருட்டா ஒரு கடை இருக்கும்-ல அங்க இருந்து எங்களுக்கு அல்வா வாங்கிட்டு வாங்க' என்று சொல்லி அனுப்புவாங்களாம்.
அதுமட்டுமல்லாமல் வேலை முடிந்து சாயங்காலம் சோர்வா வரும் போது களைப்பு தீர, ஒரு 50 கிராம் அல்வாவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வீட்டிற்கு செல்லும் போது, அப்போது உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் இருக்கும் பாருங்க, அதை அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் அதோட ஸ்பெஷல் தெரியும். எனவே மக்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட பெயர் தான் இருட்டுக்கடை" என்று கூறினார்.
இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம்
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தனித்துவமான சுவையைக் கொண்டது. இதற்கு அந்த அல்வா தயாரிக்க பயன்படுத்தப்படும் தாமிரபரணி ஆற்றின் நீர் என்று நம்பப்படுகிறது. பாரம்பரிய இருட்டுக்கடை அல்வாவானது மூன்று நாட்களுக்கும் மேலாக தாரிக்கப்படுகிறது. அதில் கோதுமையை தாமிரபரணி ஆற்றின் நீரில் நன்கு ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து நொதிக்க வைத்து, பின் சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து குறைவான தீயில் மெதுவாக சமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அல்வாவும் தேர்தல் பிரச்சாரக் கலாச்சாரமும்
சுவாரஸ்யமாக, திருநெல்வேலி அல்வா தேர்தல் பிரச்சாரங்களிலும் இடம்பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதற்காக அல்வா போன்ற உள்ளூர் சிறப்பு உணவுகளைப் பயன்படுத்துகின்றன. அதுவும் கட்சி பிரச்சார கூட்டங்களின் போது அல்வாவை வழங்குவது அல்லது உரைகளில் அதைக் குறிப்பிடுவது பிரச்சாரங்களுக்கு ஒரு நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தொடுதலைச் சேர்க்கிறது.
தமிழ் கலாச்சாரத்தில் உணவு ஒரு சக்திவாய்ந்த பங்கை வகிக்கிறது என்பதை வேட்பாளர்கள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் திருநெல்வேலி அல்வா போன்ற ஒரு புகழ்பெற்ற உணவைப் பயன்படுத்துவது வாக்காளர்களிடையே நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications