Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள்! யார்யார்-ன்னு பாருங்க..
Tamil Nadu Election 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலால், தற்போது தமிழ்நாடு அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பல கட்சி தலைவர்களும் தொகுதிவாரியாக தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக அந்த தொகுதியில் நிற்பதோடு, தொடர்ந்து வெற்றி பெற்றும் வருகிறார்கள்.
இப்படி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் வேட்பாளர்கள் அந்த தொகுதியையே தனது கோட்டையாக மாற்றியுள்ளனர். அதாவது, இந்த தொகுதியில் வேறு யாரும் வெற்றி பெற முடியாது. அந்த அளவில் வாக்காளர்களுடன் வேட்பாளர் ஆழமான பிணைப்பை கொண்டுள்ளனர். அப்படி ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள் யார்யார் மற்றும் எந்த தொகுதி என்பதை காண்போம்.

கே. ஏ. செங்கோட்டையன்
பல ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய ஒரு மூத்த அரசியல் தலைவர் தான் கே. ஏ. செங்கோட்டையன். இவரது தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் ஆகும். இவர் அதிமுகவில் இருந்த போது சுமார் 9 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று அசத்தினார். தற்போது இவர் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றுள்ளார்.
துரைமுருகன்
தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருபவர்களில் ஒருவர் தான் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமாவார். இவரது தொகுதி காட்பாடியாகும். இந்த தொகுதியில் இவர் தொடர்ந்து பல முறை வென்று, ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை அமைத்துள்ளார். அவர் 1971 ஆம் ஆண்டு முதல் இந்த காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று வருகிறார்.
ஓ. பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து திமுகாவிற்கு சென்றுள்ள முன்னாள் முதல்வர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்னும் ஓபிஎஸ். இவரது தொகுதி தேனியில் உள்ள போடிநாயக்கனூர் ஆகும். இந்த தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று வருகிறார். இந்த வெற்றியானது அத்தொகுதியில் அவருக்குள்ள வலுவான உள்ளூர் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கின்றன. அதுமட்டுமின்றி பெரியகுளம் தொகுதியிலும் நின்று 2 முறை வெற்றி பெற்றுள்ளார். மாறிவரும் அரசியல் சூழல்களில், அவரைப் போன்ற தலைவர்கள் தங்கள் வாக்காளர் தளத்தின் காரணமாகத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.
மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தேர்தல் களத்தில் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டிவரும் மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவர் தான் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். இவர் கடந்த பல ஆண்டுகளாக கொளத்தூர் மற்றும் ஆயிரம் விளக்கு போன்ற தொகுதிகளில் நின்று பல முறை வெற்றி பெற்றுள்ளார். இவரது நீண்டகால அரசியல் பயணமும், மக்களுடனான ஆழமான தொடர்பும், அத்தொகுதியை அவரது கோட்டையாக்கியுள்ளது.
எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக கட்சியின் தற்போதைய தலைவர் தான் எடப்பாடி கே. பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் தனது ஆதிக்கத்திற்காக அறியப்படும் இவர், இந்த தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது கோட்டையாக மாற்றியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

