Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது!
Pratiyuti Drishti Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலையை மாற்றி, மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியுமாக கருதப்படுபவர் சுக்கிரன்.

அதே சமயம் கர்மா, நீதி, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரில் வரும் போது உருவாவது தான் பிரதியுதி திருஷ்டி யோகம். இந்த யோகமானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது சனியும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 180 டிகிரியில் இருப்பார்கள்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பிரதியுதி திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்வில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவற்றை தீர்க்க நல்ல வழி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
பிரதியுதி திருஷ்டி யோகத்தால் கடக ராசிக்காரர்கள் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
பிரதியுதி திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் பண பிரச்சனைகளை சமாளிக்கும் வாய்ப்புள்ளது. உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
மீனம்
பிரதியுதி திருஷ்டி யோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


