Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா?

Independence Day 2026: இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த சுதந்திர தின நாளில் இந்தியா தனது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களை கௌரவித்தும் வருகிறது.

Independence Day 2026 Is it the 79th or the 80th Independence Day

நாடெங்கும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், தேசிய கொடி ஏற்றப்படும். அதுமட்டுமின்றி, தேசபக்தி நாடகங்கள், கவிதைகள், பேச்சுப் போட்டி, கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடத்தப்படும்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் வரும் போது, பலரது மனதில் ஒரு குழப்பம் எழும். அது தான் நாம் எந்த சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பதாகும். பலர் இந்த ஆண்டை 79 ஆவது சுதந்திர தினமாகவும், சிலர் 80 ஆவது சுதந்திர தினமாகவும் கூறுகின்றனர். இதனால் உண்மையில் இந்த ஆண்டு நாம் 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோமா அல்லது 80 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோமா என்பது தெரியவில்லை. இப்போது இதை எப்படி கணக்கிட வேண்டும் என்பதைக் காண்போம்.

சுதந்திர தினத்தை கணக்கிடும் முறை

எந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பதில் குழப்பம் ஏற்பட காரணம், அதை கணக்கிடும் முறை தான். பொதுவாக இரண்டு வழிகளில் சுதந்திர தினம் கணக்கிடப்படுவதால் தான் இப்படியான குழப்பம் ஏற்படுகிறது. அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பார்த்தால், கணக்கீடு இப்படி இருக்கும். 2026-1947=79 ஆண்டுகள். இதன்படி பார்த்தால், 2026 ஆம் ஆண்டு இந்தியா தனது 79 ஆவது சுதந்திர தினத்தை நிறைவு செய்கிறது.

அதுவே மொத்தம் எத்தனை ஆண்டுகள் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்று பார்த்தால், 1947 - முதல் சுதந்திர தினம், 1948 - இரண்டாவது சுதந்திர தினம் என தொடர்ந்து 2026 - 80 ஆவது சுதந்திர தினம் ஆகும். இதன் பொருள் இந்தியா சுதந்திர தினம் அடைந்த ஆண்டும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாம் 80 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அதே வேளையில் இந்தியா தனது 79 ஆண்டுகால சுதந்திரத்தை நிறைவு செய்துள்ளது. எனவே கேட்கும் கேள்விக்கேற்ப பதிலளியுங்கள்.

சுதந்திர தின 2026 கருப்பொருள்

2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் 'Yuva Shakti for Viksit Bharat@2047' என்பதை மையமாகக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த ஆண்டு வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தரும் போது தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அரசு அறிவித்துள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 14, 2026, 12:24 [IST]
Desktop Bottom Promotion