Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்!
Tamil Nadu Election 2026: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒருவித ஆர்வத்தை தூண்டுகிறது. ஏனெனில் இதுவரை முந்தைய தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று தான் ஆட்சியைப் பிடிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக தவெக தலைவர் விஜய் தவெக கூட்டணி எதுவும் வைக்காமல், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். மேலும் ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதே சமயம் இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று அதிமுக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. முக்கியமாக சசிகலா, பாமகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார். மொத்தத்தில் இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத ஐந்து முனை போட்டியாக நிலவுகிறது. இப்படி இந்த 5 கட்சிகள் தீவிரமாக போட்டியிடுவதால், இந்த கட்சிகளின் தலைவர்கள் நிற்கும் தொகுதிகள் முக்கியமானவைகளாக, அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவையாக திகழ்கின்றன. இப்போது அந்த டாப் 5 ஸ்டார் தொகுதிகளைக் காண்போம்.
1. கொளத்தூர்: மு.க. ஸ்டாலின்
தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வரான மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி தான் கொளத்தூர். இந்த கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் அவர்களை வீழ்த்துவது என்பது இயலாத ஒன்று. இந்த தொகுதியில் யார் இவருக்கு எதிராக நின்றாலும், அவருக்கு தோல்வி நிச்சயம். சொல்லப்போனால், இத்தொகுதி தி.மு.க-வின் கோட்டை என்றே கூறலாம்.
2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி தான் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி. இந்த தொகுதியில் நிற்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, இந்த தேர்தல் மிகவும் முக்கியம். ஏனெனில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக திமுக-வின் எதிர்காலமாக கருதப்படுவதால், இவரது அரசியல் வாழ்க்கைக்கு இந்த தேர்தல் வெற்றி இன்றியமையாததாகும்.
3. எடப்பாடி: அதிமுக பழனிச்சாமி
அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தொகுதி சேலத்தில் உள்ள எடப்பாடியாகும். இந்த எடப்பாடி தொகுதியில் அதிமுக-வை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த தொகுதி மக்களுக்காக பல நல்லதை செய்துள்ளார் மற்றும் இன்னும் செய்வார் என்ற நம்பிக்கையில் மக்களும் இவரை யாரும் தோற்கடிக்க முடியாத வகையில் வாக்களித்து வெற்றி பெற வைத்து வருகின்றனர்.
4. பெரம்பூர்: தவெக விஜய்
தவெக தலைவர் விஜய் அவர்கள் போட்டியிடும் தொகுதி தான் பெரம்பூர். முதன்முதலாக விஜய் அவர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். முக்கியமாக இந்த பெரம்பூர் தொகுதி, கொளத்தூரை ஒட்டி இருப்பதால், இந்த தேர்தலில் இவ்விரு தொகுதிகளும் சற்று பரபரப்பாகவே இருக்கும். விஜய் அவர்களுக்கு இளைஞர்களின் வாக்குகளும், நீண்ட காலமாக மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களின் வாக்குகளும் கிடைத்தால், இந்த ஆண்டின் தேர்தலில் தவெக-வின் அரசியல் பிரகாசமாக தொடங்கும்.
5. காரைக்குடி: நாம் தமிழர் சீமான்
நாம் தமிழர் கட்சி வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட்டணி எதுவும் வைக்காமல் தனித்து போட்டியிடுகின்றன. அதுவும் இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கட்சியும் போட்டியிடுவதால், இந்த ஆண்டு இந்த தொகுதியில் திமுக கட்சிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
