Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா?
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி, தமிழக தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளிவரவுள்ளது. இதனால் தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
குறிப்பாக அரசியல் தலைவர்கள் குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட, வேட்பாளர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதுவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். மேலும், வேட்பாளர் இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
சுவாரஸ்யமாக, இந்தியாவில் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. அதாவது எந்த படிப்பை படித்திருந்தாலும் அரசியலில் நுழைய முடியும். அந்த வகையில் தற்போது தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி என்னவென்பதை இப்போது காண்போம்.
மு.க. ஸ்டாலின்
தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்பு 1973 ஆம் ஆண்டு சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. வரலாறு (B.A. History) பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது.
எடப்பாடி கே. பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சரான சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கே. பழனிச்சாமி அவர்கள், சிலுவம்பாளையத்தில் தனது பள்ளி படிப்பை படித்தார். அதன் பின் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி (B.Sc.) படித்தார். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால், இவரால் முழுமையாக படிப்பை முடிக்கமுடியவில்லை என்று கூறப்பட்டாலும், சில தரவுகள் அவர் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றதாக கூறுகின்றன. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி இவரை சிறப்பித்தது.
கே. அண்ணாமலை
தமிழக அரசியலில் நன்கு படித்த இளைஞர் என்ற பிம்பத்துடன் நுழைந்து வலம் வருபவர் தான் பாஜக-வைச் சேர்ந்த கே. அண்ணாமலை. இவர் கோவையின் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (B.E. Mechanical) படிப்பை முடித்தார். அதன் பின் ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கர்நாடகாவில் உயர் அதிகாரியாக சில காலம் பணியாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பள்ளி படிப்புடன், லயோலா கல்லூரியில் பி.காம். வணிக தகவல் தொடர்பு பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு கலை மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். இதனால் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவர் அரசியலில் தீவிரமாக இறங்கி, தற்போது ஒரு இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக உள்ளார். இப்படியான இவரது வளர்ச்சிக்கு அவரது வணிகவியல் சார்ந்த படிப்பு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
விஜய்
தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த விஜய் அவர்கள், தவெக என்னும் கட்சியைத் தொடங்கி, தற்போது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவராக கருதப்படுகிறார். விஜய் அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் தொடர்ச்சியான சினிமா வாய்ப்புக்கள் மற்றும் படப்பிடிப்பு ஆகியவற்றால், இவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை. இருப்பினும், இவரது சாதனைகளைப் பாராட்டி, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் 2007-இல் இவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கியது.
சீமான்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் அவர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளி படிப்பை முடித்தார். பின் அங்குள்ள ஜாகிர் உசேன் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். சினிமாவின் மீதான ஆர்வத்தால் சீமான் அவர்கள் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
