Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Avani Matha Rasipalan 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

சிம்ம ராசிக்கு சூரிய செல்வதால் தமிழ் மாதமான ஆவணி மாதம் பிறக்கிறது. இந்த ஆவணி மாதமானது தமிழ் மாதங்களில் 5 ஆவது மாதமாகும். சொந்த ராசிக்கு சூரியன் செல்வதால், அது தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன்கள், கௌரவம், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
இந்த ஆவணி மாதத்தில் சூரியனின் நிலையால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் அதன் தாக்கம் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் சூரியனால் பிறக்கும் ஆவணி மாதமானது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் புதிய உயரங்களை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன், கௌரவமும் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களிடன் நட்பு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஆவணி மாதமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிகளைத் தரும் மாதமாக இருக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைகளுக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்தியை இம்மாதத்தில் பெற வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஆவணி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களின் தலைமைத்துவ திறன்கள் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் மேம்படும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிக விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




