Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Thanjavur Rosapoo Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்துவிட்டதா? சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே உங்கள் வீட்டில் இருப்போருக்கு வாய்க்கு ருசியாக ஒரு அட்டகாசமான மற்றும் சற்று காரமான, கண்ணைக் கவரும் சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் கண்ணைக் கவரும் நிறத்தில் அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த ரோசாப்பூ சட்னி என்பது அதன் சுவையால் அல்ல மாறாக அதன் நிறத்தால் ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் 4 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- வர மிளகாய் - 5
- காஷ்மீரி மிளகாய் - 4
- புளி - சிறிதளவு
- சிறிய தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும், பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாயைச் சேர்க்க வேண்டும், அப்போதுதா இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிவப்பு நிறம் கிடைக்கும்.
- பின்னர் தக்காளி மற்றும் புளியைச் சேர்த்து, தக்காளி குழைந்துபோகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பைப் பொரியவிட்டு, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான தஞ்சாவூர் ரோசாப்பூ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
