Latest Updates
-
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள்
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Venus Transit In Chithirai Nakshatra On 25 August 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இருப்பார்.
சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
மீனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications