Latest Updates
-
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்?
IPL 2026: இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணிகள் களத்தில் மோதி வருகின்றன. பொதுவாக ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே பரபரப்பாகத் தான் இருக்கும். அதுவும் சிஎஸ்கே Vs ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி, சாதாரண லீக் போட்டியை விட மேலானது. அதாவது மற்ற அணிகளுடனான போட்டியை விட, இவ்விரு அணிகளும் மோதும் போது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
அந்த வகையில் சிஎஸ்கே Vs ஆர்சிபி அணிகள் ஏப்ரல் 05 ஆம் தேதி மோதவுள்ளன. இந்த போட்டியானது இரவு 7 மணியளவில் தொடங்கவுள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கனவே இரண்டு அணிகளுடன் விளையாடி தோல்வியை தழுவியுள்ளன. இந்த போட்டியிலும் தோல்வியுற்றால் அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தான் தரும்.

ஜோதிடத்தின் படி, இப்போட்டி நேரத்தில் சித்தி யோகம் தீவிரமடைவதால், போட்டியானது மிகவும் பரபரப்பாக இருக்கும். அதுவும் இந்த போட்டி ஆர்சிபி அணியின் சொந்த மண்ணான பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இன்ஸ்டாஆஸ்ட்ரோ என்னும் தளத்தில் இந்த போட்டி குறித்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, இன்று நடக்கும் சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியில் எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என்பதை காண்போம்.
சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு
சிஎஸ்கே அணிக்கான ஜோதிட கணிப்பு
சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிடத்தின் படி, ஒரு அணியின் வெற்றி, அந்த அணியின் கேப்டனின் ஜாதகத்தைப் பொறுத்து கணிக்கப்படும். அந்த வகையில் ஜோதிடக் கணிப்புகளின்படி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு குரு வியூகத்தில் செயல்படுகிறது. அதுவும் இந்த போட்டியில் ருதுராஜின் ஜாதகம் சரியான நேரம், நிதானம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சந்திரன்-செவ்வாய் கிரகங்களின் இணைப்புடன் களமிளறங்குவதால், அதிரடியாக விளையாடுவார். சொல்லப்போனால் கடினமான பந்துவீச்சையும் துல்லியமாக அடிக்கும் அவரது திறன் உச்சத்தில் உள்ளது. சித்தி யோகம் தீவிரமாக இருப்பதால், மிடில் ஓவர்களில் இவரே ஆட்டத்தின் போக்கை மாற்றலாம்.
அதேப் போல் பௌலிங்கில் சுழற்பந்து வீச்சாளரான நூர் அஹ்மத் சிறந்து செயல்படுவார். ஏனெனில் இவரது 11 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் இவரது பௌலிங் எதிரணியினர் எதிர்கொள்ள முடியாத வகையில் கடினமாக இருக்கும். சொல்லப்போனால் இவரது பௌலிங் ஆர்சிபி-க்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்.
ஆர்சிபி அணிக்கான ஜோதிட கணிப்பு
ஜோதிட கணிப்புகளின் படி, ஆர்சிபி அணியானது இந்த போட்டியில் வலுவான செவ்வாய் கிரகத்தின் தாக்கத்துடன் களமிறங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் குரு பகவான் சாதகமான நிலையில் உள்ளார். இதனால் சாதனைகளை முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதுவும் ஆர்சிபி-யின் வெற்றிக்கு ஒரு அடித்தளமாக இவரது ஆட்டம் இருக்கக்கூடும்.
அதேப் போல் பௌலிங்கில் ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார். ஏனெனில் இவரது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனியின் நிலையான பார்வையால், பவர்ப்ளேயில் எதிர்கொள்ள முடியாத வகையில் இவரது பந்துவீச்சு கடினமாக இருக்கும். சொல்லப்போனால் பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புள்ளது.
டாஸ் யார் வெல்வார்?
சிஎஸ்கே Vs ஆர்சிபி-க்கான போட்டியில் டாஸை வெல்வது சிஎஸ்கே அணியாக இருக்கும். விருச்சிகத்தில் சந்திரன் இருப்பதால், வலுவான உள்ளுணர்வு கொண்ட கடக ராசியைச் சேர்ந்த கெய்க்வாட் நெருக்கடியான சூழ்நிலையிலும் இலக்கை விரட்டும் தனது அணியின் திறனையும் நம்பி, அவர் முதலில் பௌலிங் செய்ய விரும்புவார்.
சிஎஸ்கே Vs ஆர்சிபி - யார் வெற்றி பெறுவார்கள்?
ஏப்ரல் 05 ஆம் தேதி கிரக நிலைகளின் படி, சிஎஸ்கே அணிக்கு எதிராதன போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 52% உள்ளது. சொந்த மண்ணில் ஆர்சிபி விளையாடுவதோடு, சித்தி யோகம் உச்சத்தில் இருப்பதாலும், விராட் கோலியின் சிறப்பான ஆட்டமும், கேப்டனின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதாலும், ஆர்சிபி வெற்றி பெற வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, இறுதி ஓவர் வரை போராடுவார்கள். இருப்பினும், இறுதியில் ஆர்சிபி-யே வெற்றி பெறுவதாக கிரகங்கள் மற்றும் நட்சத்திர நிலைகள் கூறுகின்றன. இருப்பினும், பொறுத்திருந்து பார்ப்போம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications