Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
அக்குள் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க!
Summer Beauty Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வியர்வை துர்நாற்றம். இந்த வியர்வை துர்நாற்றமானது ஒருவரை மிகுந்த சங்கடத்திற்கு ஆளாக்குவதோடு, தனிமைப்படுத்தவும் செய்யும். உங்கள் மீதும் இப்படி விரும்பத்தகாத உடல் துர்நாற்றம் வீசுகிறதா?
குறிப்பாக உங்கள் அக்குளில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறதா? பொதுவாக சருமத்தின் மீது வியர்வையும் பாக்டீரியாவும் ஒன்றோடொன்று வினைபுரியும் போது தான் விரும்பத்தகாத துர்நாற்றம் உருவாகிறது. இப்படியான அக்குள் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் ஏராளமான டியோ மற்றும் ரோல்ஆன்கள் உள்ளன.

இருப்பினும் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தலாம். எனவே எடுத்தவுடனேயே கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன், ஒருசில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். கீழே கோடையில் சந்திக்கும் அக்குள் துர்நாற்றத்தைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தக்காளி ஜூஸ்
அக்குள் துர்நாற்றத்தைப் போக்க தக்காளி ஜூஸ் பெரிதும் உதவி புரியும். அதற்கு தக்காளியை அரைத்து, அதன் சாற்றுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அக்குளை கழுவுங்கள். இப்படி தொடர்ந்து பயன்படுத்தும் போது, ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. எலுமிச்சை சாறு
அக்குளில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் மற்றொரு பொருள் தான் எலுமிச்சை. அதற்கு ஒரு பௌலில் பாதி எலுமிச்சையின் சாற்றினை எடுத்து, அத்துடன் சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் காலை, இரவு நேரங்களில் பயன்படுத்தும் போது, அக்குள் நாற்றத்தைத் தடுக்கலாம்.
3. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவும் அக்குள் துர்நாற்றத்தைப் போக்க உதவும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, குளிப்பதற்கு முன் அக்குளில் தடவி 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, அக்குள் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, அக்குளில் தடவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம், அக்குள் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
5. டீ-ட்ரீ ஆயில்
அக்குள் துர்நாற்றத்தை உதவும் மற்றொரு பொருள் தான் டீ-ட்ரீ ஆயில். அதற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலை எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் நீரை சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அக்குளில் ஸ்ப்ரே செய்து 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் குளிப்பதற்கு முன்பும் கூட செய்யலாம். இதனால் அக்குள் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


