Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை தினமும் நைட் போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே, நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான சரும பிரச்சனை தான் முகப்பரு. முக்கியமாக காலேஜ் செல்பவர்கள் இந்த முகப்பரு பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். உங்களுக்கும் இப்படி முகப்பரு அதிகமாக உள்ளதா? கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாலே உங்கள் முகம் அசிங்கமாக காணப்படுகிறதா?
இந்த முகப்பருக்களை போக்க கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் கவலைப்படாதீர்கள். முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஏராளமான பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் உள்ளன.

இந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது கோடையில் சந்திக்கும் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் டாப் 5 ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. பட்டை மற்றும் தேன் பேக்
* தேன் மற்றும் பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பருக்களை வராமல் தடுக்கும்.
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே சமயம் தயிரில் இறந்த செல்களை நீக்க உதவும் லாக்டிக் அமிலம் உள்ளன.
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. கற்றாழை மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்
* கற்றாழை எரிச்சல் மிக்க சருமத்தை குளிர்விக்கும், அதே சமயம் டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவும்.
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களைப் போக்கும். அதே சமயம் தேன் சருமத்தில் உள்ள அழற்சி மற்றும் தடிப்புக்களைக் குறைக்கும்.
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்
* எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளன. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை, பருக்களின் தழும்புகளை மறையச் செய்யும். அதே சமயம் முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன், சருமத்தை இறுக்கமடையச் செய்து, அழகாக்கும்.
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஃபேஸ் பேக்குகளை தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.



Click it and Unblock the Notifications