இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் துர்நாற்றம் குறையும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடலில் இருந்து எப்போதும் வியர்வை துர்நாற்றம் கடுமையாக வீசுமா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இப்பிரச்சனையால் நீங்கள் மட்டும் அவஸ்தைப்படுகிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். உலகில் உள்ள ஏராளமான மக்கள் இந்த பிரச்சனையால் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறார்கள்.

Top Foods That Can Reduce Body Odour

உடல் துர்நாற்றம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம், ஆரோக்கியமற்ற டயட், அதிகப்படியான வியர்வை, மோசமான சுகாதாரம் மற்றும் மரபணுக்கள் போன்றவற்றால் ஏற்படும். இந்த உடல் துர்நாற்ற பிரச்சனையை டயட்டுகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

இக்கட்டுரையில் அதிகப்படியான வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் உள்ளது. இவை உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் தக்காளி விரிவடைந்துள்ள சருமத்துளைகளை சுருங்கச் செய்து, வியர்வையை உற்பத்தி செய்யும் குழாய்களை அடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல நேச்சுரல் டியோடரண்ட். இது உடலை நல்ல நறுமணத்துடன் வைத்துக் கொள்ளும். இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும்.

சேஜ்

சேஜ்

சேஜ் என்னும் மூலிகை கீரையில் உள்ள நறுமணமிக்க பொருட்கள் உள்ளது. இவை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வியர்வை நாற்றத்தைக் குறைக்கும்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

பார்ஸ்லியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, உடலையும் சுத்தம் செய்யும்.

அருகம்புல்

அருகம்புல்

அருகம்புல்லில் குளோரோபில் அதிகமாக உள்ளது. இது உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். அதுவும் வியர்வையை உண்டாக்கும் அமிலங்களை நடுநிலைப்படுத்தி துர்நாற்றத்தைக் குறைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் ஏராளமான அளவில் உள்ளது. இது துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைத் தடுத்து, உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Foods That Can Reduce Body Odour

Read this article to know about the foods that can reduce body odour.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter