For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாவா வழிந்தோடுவதை லைவாக படம்பிடித்த அசத்தல் கலைஞர் - புகைப்படத் தொகுப்பு!

ஹவாயின் எரிமலை குழம்பி வழிவதை அழகாக படம்பிடித்த எரேஸ் மரோம்!

|

கடந்த அக்டோபர் 2017ல், இரண்டு வாரம் ஹவாயில் தனது நண்பருடன் தங்கி, கிலாயூ எரிமலை குழம்பு வழிந்தோடுவதை படம் பிடித்து வந்துள்ளார் எரேஸ். ஏறத்தாழ எட்டு கிலோமீட்டர் உயரம் மலை ஏறி, கிலாயூ எரிமலையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த குழம்பை மிக அழகாக படம் பிடித்து திரும்பியுள்ளார் இந்த அசத்தல் புகைப்பட கலைஞர்.

இவர்கள் அந்த மலையின் எல்லையில் இருந்த ஒரு தேசிய பூங்காவில் இருந்து டிரான் (Drone) பயன்படுத்தி இந்த படங்களை க்ளிக்கியுள்ளனர். பகல் நேரம், சூரிய அஸ்தமனம் மற்றும் அந்தி பொழுது என வெவ்வேறு நேரங்களில் மூன்று மணிநேரம் செலவழித்து இந்த படங்களை எடுத்துள்ளனர்.

All Image Credits: erezmarom

டிரான் பயன்படுத்தி படங்கள் எடுக்கும் போது சில படங்கள் கருமையாக பதிவாகியிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் இவர் படம் எடுத்துக் கொண்டே இருந்துள்ளார். வீடு திரும்பிய பிறகு தான் எரேஸ்க்கு தெரிந்துள்ளது, அவரது டிரான் கேமரா உள்ளே இருந்தே பிளாஸ்டி பாகம் கருக ஆரம்பித்ததால் அப்படி படங்கள் கருமையாக விழுந்துள்ளன என.

லாவா (எரிமலை குழம்பு) அருகே இருந்து படம் எடுத்து திரும்பியதில், இது மிக சிறிய இழப்பு தான் என எரேஸ் சிரித்தப்படி கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாவா எனும் வார்த்தை...

லாவா எனும் வார்த்தை...

1737 வரை லாவா என்ற வார்த்தையே இல்லை. வெசுவிஸ் எனும் எரிமலை வெடித்து, அதிலிருந்து எரிமலை குழம்பு வெளியேறிய போதுதான், அந்த சூடான குழம்பிற்கு லாவா என்று பெயர் வைத்தனர்.

லாவா என்றால் லத்தின் மொழியில் வழுக்கி விழுவதை குறிக்கும் சொல்லாகும்.

10 - 20

10 - 20

தினமும் உலகில் எங்கோ சில இடங்களில் 10 - 20 வரையிலான எண்ணிக்கையில் எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன என கூறப்படுகிறது.

ரோமன் கடவுள்

ரோமன் கடவுள்

வால்கனோ என்ற பெயர ரோமன் கடவுளின் பெயரில் இருந்து மருவி வந்தது தான் என்று கூறுகிறார்கள். ரோம கடவுளான Vulcan என்பவற்றின் பெயரில் இருந்து தான் Volcano என்ற பெயர் வந்துள்ளது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

உலகின் தென் பகுதியில் இருக்கும் ஆக்டிவ் எரிமலை அண்டார்டிகா என கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் ஆராய்ச்சி மையத்தின் அருகே கிறிஸ்டல் கற்களை கக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீலநிறம்

நீலநிறம்

பொதுவாக எரிமலையில் இருந்து வெளிவரும் எரிமலை குழம்பு மஞ்சள், சிவப்பு, கோல்டன் நிறத்தில் தான் இருக்கும். ஆனால், இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று வெடிக்கும் போது, அதிலிருந்து நீலநிற லாவா வெளிப்படுகிறது.

20 இலட்சம்

20 இலட்சம்

1600ல் நடந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தில் பெருவில் இருபது இலட்ச ரஷ்யர்கள் உயிரிழந்தனர். எரிமலை வெடிப்பு காரணமாக நடந்த பெரும் உயிரிழப்பு சம்பவமாக இது கருதப்படுகிறது.

மிஹாரா

மிஹாரா

ஜப்பானில் இருக்கும் மிஹாரா எனும் எரிமலை சுற்றி அரசாங்கத்தால் தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காரணம், இதை சுற்றி இருக்கும் மக்கள் தற்கொலை செய்துக் கொள்ள இந்த எரிமலையில் குதிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்படி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

CO2 வாயு

CO2 வாயு

ஆப்ரிக்காவின் கேமரூனில் 1986ல் நடந்த ஒரு எரிமலை வெடிப்பு சம்பவத்தில் CO2 வாயு வெளியான காரணத்தால் ஒரே நிமிடத்தில் 1746 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடல் மட்டத்திலும்

கடல் மட்டத்திலும்

நிலத்திற்கு மேல் மட்டுமல்லாது, கடல் மட்டத்திலும் எரிமலைகள் இருக்கின்றன. உலகின் 80% எரிமலை வெடிப்புகள் நீருக்கு அடியே தான் உண்டாகி வருகிறது.

கருங்கல் பாறைகள்

கருங்கல் பாறைகள்

லாவா ஓர் அடர்த்தியான குழம்பு. இது புவியின் மேற்பரப்பில் இருந்து வெடித்து வெளியேறுகிறது. இது பெரும்பாலும் உருகிய பாறைகள் அல்லது பூமிக்கு மேல் / கீழ் பகுதியின் கருங்கல்லாக தான் இருக்கும்.

65 மில்லியன்

65 மில்லியன்

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய கருங்கல் லாவா வெடிப்பு காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது இந்தியாவில் வழிந்தோடியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இதில் இருந்து வெளியான நச்சு, விஷத்தன்மை காரணமாக அழிவு ஏற்பட்டிருக்கலாம். என்றும், இந்த பெரிய எரிமலை வெடிப்புக்கு உடுக்கோள் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

எலட்ரிக் சார்ஜ்

எலட்ரிக் சார்ஜ்

சில எரிமலை வெடிப்பு போது எலட்ரிக் சார்ஜ் உண்டாக வாய்ப்புகள் உள்ளன என்றும். இதன் காரணத்தால் இரண்டு மையில் தூரத்திற்கு மின்னல் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

1,500

1,500

இன்றுவரை உலகில் மொத்தம் 1,500 எரிமலைகள் ஆக்டிவாக இருக்கின்றன. மேலும், நமது சூரிய குடும்பத்திலேயே வீனஸ்'ல் மட்டும் தான் அதிக அளவிலான எரிமலைகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கோரியம்

கோரியம்

எரிமலை குழம்பில் பல வகைகள் இருக்கிறதாம். அதில் ஒன்று தான் கோரியம் (Corium) லாவா. இதில் யுரேனியம் டை ஆக்சைடு எரிபொருள் இருக்கிறதாம். இதை சூப்பர்ஹீத் என கூறுகிறார்கள். ஏறத்தாழ 3,600 பாரன்ஹீட் வெப்பம் கொண்டிருக்கும் இந்த லாவா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Photos: Erez Marom Who Captured The Mount kilauea's Lava Flow Live!

I Melted My Drone Camera Flying Too Close To The Lava Flows Of Mount Kilauea, Hawaii,
Desktop Bottom Promotion