உணவு பிரியரா நீங்க? இதோ நீங்க சுவைத்து பார்க்க வேண்டிய 7 பிரியாணி வகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சாப்பாட்டு பிரியர்கள் அனைவருக்கும் பிரியாணி பிடிக்கும். சைவமாக இருப்பினும் சரி, அசைவமாக இருப்பினும் சரி. இரண்டு பிரிவிலும் பல வகை பிரயாணிகள் கிடைக்கின்றன. முக்கியமாக பேச்சுலர் வாழ்க்கையும் பிரியாணியும் ஒரு சுவையான காதல் என்றே கூறலாம்.

சிலரால் பிரியாணி இல்லாத வார இறுதியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஞாயிறுகளில் மதியம் வீட்டில் கமழும் அந்த பிரியாணி வாசத்திற்கு ஈடிணையே இல்லை. உங்களுக்கு பிரியாணி பிடிக்கும், நீங்கள் ஒரு பிரியாணி பிரியர் என்றால் நீங்கள் இந்த பிரியாணி வகைகளை சுவைத்தே ஆகவேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்கத்தா பிரியாணி!

கல்கத்தா பிரியாணி!

அவாதி (Awadhi) எனும் வகையில் இருந்து பிறந்தது தான் இந்த கல்கத்தா பிரியாணி. இதில் ஃப்ளேவர்கள் அதிகம் இருக்கும். காரம் சற்று குறைவாகவும், அதனுடன் முட்டை மற்றும் உருளைக்கிழங்கும் தனிதன்மைக்காக சேர்த்திருப்பார்கள்.

ஐதராபாத் பிரியாணி!

ஐதராபாத் பிரியாணி!

பாஸ்மதி அரிசி மற்றும் மட்டன் கொண்டு தயாரிக்கப்படும் ஐதராபாத் பிரியாணி மிகவும் பரிட்சயமான ஒன்று. இதன் தனித்துவமான விஷயமே இதில் சரிக்கு சரியான அளவில் அரிசியும் இறைச்சியும் சேர்க்கப்பட்டிருக்கும்.

லக்னோ பிரியாணி!

லக்னோ பிரியாணி!

இதை அவாதி பிரியாணி என்றும் அழைப்பார்கள். இது முகலாய சமையல் வகை சார்ந்தது. இதை ஒருமுறை நீங்கள் சாப்பிட்டுவிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஏங்க வைக்கும் சுவை தரவல்லது ஆகும்.

திண்டுக்கல் பிரியாணி!

திண்டுக்கல் பிரியாணி!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி உலக ஃபேமஸ். தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரியாணி இது. காரம் மற்றும் மசாலா சற்றே தூக்கலாக இருக்கும். மணம் அதிகமாக இருக்கும்.

சிந்தி பிரியாணி!

சிந்தி பிரியாணி!

ஸ்பெஷல் இறைச்சி மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் காரசாரமான பிரியாணி, தனித்துவமான அதீத மணம் கொண்டிருக்கும்.

பேரி பிரியாணி!

பேரி பிரியாணி!

மசாலா மற்றும் காரம் சரியான அளவில் சேர்ப்பு கொண்டுள்ள வகையில் சமைக்கப்படும் பிரியாணி வகை இது. இறைச்சி மட்டும் அல்லாமல் பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சி தாராளமாக சேர்த்து இந்த பிரியாணி சமைக்கப்படுகிறது.

மெமோனி (Memoni) பிரியாணி!

மெமோனி (Memoni) பிரியாணி!

மெமோன் (memon) எனும் தெற்காசியாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர்-ன் தனித்துவமான பிரியாணியாக இது விளங்கி வந்தது. ஆனால், இது இப்போது மெல்ல, மெல்ல எல்லா பகுதிகளிலும் பிரபலம் அடைந்து வரும் பிரியாணியாக மாறி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Variants Of Biriyani Every Food Lover Must Try

Variants Of Biriyani Every Food Lover Must Try
Please Wait while comments are loading...
Subscribe Newsletter